3) | உரோமப் பேரரசர் ஐஸ்டீனியனின் சமயச் சீர்திருத்தங்களைக் குறிப்பிடுக. |
ஐஸ்டீனியன்
பைசாண்டிய அரியணையில் அமர்ந்த கடைசி உரோமப் பேரரசர் ஆவார். கிறித்துவ சமயத்தின் பொதுக்காவலராக இருந்து அதன் கோட்பாட்டின் அடிப்படையில் ஆட்சியினை மேற்கொள்ள வேண்டுமென எண்ணினார். இவரது கண்காணிப்பில் சமய விவகாரங்கள் அனைத்தும் நடைபெற்றன. போப்பாண்டவர் ஆகியோர் மன்னரது அலுவலர்களாகக் கருதப்பட்டனர். கிறித்துவ சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டன. திருச்சபையின் அமைப்புகள் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டன. கிறித்துவ சமயம் அரசு சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் புறச்சமயத்தினரைப் பேரரசிலிருந்து வெளியேற்றுவதற்கு முற்பட்டார். கிறித்துவ சமயத்திற்கு எதிரான கொள்கைகளைப் பரப்புவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. |