|
4.6 தொகுப்புரை
இயேசுபெருமான் அருளிய நற்செய்தியினை ஏற்றுப் புதியதொரு
சமுதாயம் படைத்திட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்
தோன்றியதே கிறித்துவ சமயம்.
தொடக்கத்தில் அது
ஒடுக்கப்பட்டோருக்காகச் சுரண்டும் வர்க்கத்தினரை எதிர்த்திடும்
இயக்கமாகத் தோன்றி வளர்ச்சியுற்றது. இயேசுவின் போதனைகளால்
கவரப்பட்டு கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் நிறையப்பேர்
கிறித்துவின் சீடர்களாயினர். இவர்கள்
உலகெங்கும் சென்று
கிறித்துவத்தைப் போதித்தனர். கி.பி.
4-ஆம் நூற்றாண்டில்
கிறித்துவம் உரோமில் அரசுச் சமயமாக உருப்பெற்றது. அரசின்
ஆதரவால் சொத்தும் செல்வாக்கும்
கிறித்துவத்திற்குப்
பெருகியதோடு இயேசுவின் சீடர்களே
கிறித்துவ சமயம்
உலகெங்கும் பரவுவதற்குக் காரணமாக விளங்கினர்.
கிறித்துவ
சமயம் தான் தோன்றிய முதல் நூற்றாண்டிலேயே இந்தியாவிலும்
காலூன்றியது. இக்காலத்தில் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில்
ஒருவரான புனித தோமையார் இந்தியாவிற்குச் சமயக்
கொள்கையைப் பரப்ப வந்தார். இன்றைக்கு உலகில்
ஏறத்தாழ
அனைத்து நாடுகளிலும் கிறித்துவ சமயம் பரவியுள்ளது எனலாம்.
அது உலகில் முக்கியச் சமயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
உலகின் புதிய நாடுகளில் கிறித்துவ சமயம் பரவுவதற்குப்
போப்பாண்டவர்கள் மேற்கொண்ட முயற்சி குறிப்பிடத்தக்கதாகும்.
சமய வளர்ச்சிக்குத் திருச்சபைகளும் சபை சார்ந்த
தொண்டு
நிறுவனங்களும் பங்காற்றி உள்ளன;
மருத்துவமனைகள்,
கல்விக்கூடங்கள், சமூகப் பணித்தளங்கள் அமைத்துத் தம்
பணிகளின் மூலம் மக்களைக் கவர்ந்துள்ளன. அரசியல், சமுதாயம்,
பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டோரின்
கூட்டுறவாகக் கிறித்துவ சமயம் விளங்கி வருவதோடு அவர்களின்
வாழ்க்கைக்கு ஒளிகூட்டும் விடிவெள்ளியாகத்
திகழ்ந்தும்
வருகின்றதெனில் மிகையன்று.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
புனித
பவுலடியாரின் நற்செய்திப் பணி எங்குத் தொடங்கியது? |
|
2.
|
செர்மானிய, கிறித்துவ நாகரிகக் கலப்பால் தோன்றிய
மொழிகள் யாவை? |
|
3.
|
உரோமப் பேரரசர்
ஐஸ்டீனியனின் சமயச் சீர்திருத்தங்களைக் குறிப்பிடுக. |
|
4. |
போப்பாண்டவர்
போனிஃபேஸ் கிறித்துவ சமயம் பரவுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள்
யாவை? |
விடை |
5.
|
கிறித்துவ
சமயப் பரவலுக்குச் சபைகளின் பங்களிப்பினைக்
கூறுக. |
|
|