5) |
கிறித்துவ சமயப் பரவலுக்குச் சபைகளின் பங்களிப்பினைக் கூறுக. |
கிறித்துவ
சமயத்தின் வளர்ச்சிக்குத் திருச்சபையும் புனித பிரான்சிஸ்கு அசிசியார் பிரான்சிஸ்கன் சபையையும் புனித சுவாமிநாதர் சுவாமிநாதர் சபையையும் ஏற்படுத்திக் கிறித்துவம் வளரப் பெரிதும் பாடுபட்டனர். கி.பி.16ஆம் நூற்றாண்டில் புனித இலொயோலா இஞ்ஞாசியார் இயேசு சபையை நிறுவிக் கிறித்துவ சமயம் உலகெங்கும் பரவக் காரணமாக விளங்கினார். இத்தகைய சபைகள் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், சமூகப் பணித்தளங்கள் அமைத்துத் தம் பணிகள் மூலம் மக்களைக் கவர்ந்தனர். கி.பி.15, 16-ஆம் நூற்றாண்டுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில் கிறித்துவத் துறவிகளும் குருக்களும் வணிகர்களுடன் சென்ற கிறித்துவ சமயத்தைப் பரப்பினர். |