4) போப்பாண்டவர் போனிஃபேஸ் கிறித்துவ சமயம் பரவுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் யாவை?
போப்பாண்டவர் போனிஃபேஸ் காலத்தில் ஜெர்மனி
போப்பாண்டவரின்     அருளாட்சி     எல்லைக்குள்
கொண்டுவரப்பட்டது. சார்லஸ் மார்டல், பிப்பின்
ஆகிய ஃபிராங்கிய மன்னர்கள் போனிஃபேஸிற்கு
ஆதரவளித்தனர். மேலும் ஜெர்மானிய மக்களைக்
கிறித்துவ சமயத்திற்கு மாற்றி அவர்களை உரோமின்
கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வந்தார். பின்னர்
சாக்ஸானியர்களிடையிலும் டென்மார்க், நார்வே,
ஐஸ்லேண்டு முதலிய நாட்டு மக்களிடையிலும் கிறித்துவ
சமயம் பரவியது.


முன்