6) |
அஸீஸின் காதலியின் அழகைக் கவிஞர் எவ்வாறு
வருணிக்கிறார்?
காதலி ஆனின் பாதங்களைப் பார்த்த வண்டுக் கூட்டங்கள்,
தாம் இந்நாள் வரை பார்க்காத அழகிய மலர்கள் எனக்
கருதி மொய்ப்பதற்கு நெருங்கின. அப்பொழுது கால்கள்
அசைய, தண்டைகள் ஒலி எழுந்தன. வண்டுகள் திசை மாறி
ஓடின. அவளது அழகிய கண்களைக் கெண்டை மீன்கள்
என்று கொக்குகள் உற்றுப்
பார்த்தன. மீன்கள் நீரில்
அல்லவா இருக்கும், இவை தரையில் எப்படி வந்தன என
ஏமாந்தன கொக்குகள். இவ்வாறு
காதலியின் அழகை
வருணிக்கிறார். |