தன் மதிப்பீடு : விடைகள் : II

4. தொடுக்கும் கடவுட் பழம்பாடல் எனும் பாடல்வழி
மீனாட்சியம்மையின் மாண்புகளை விளக்குக.

தெய்வத்தன்மை உடையன பழைய பாடல்கள்.
அப்பாடல்களின் பொருளாய் விளங்குபவள் மீனாட்சி.
மணம் கமழும் துறைகள் அமைந்தது தமிழ். அத்தமிழின்
இனிய சுவை போன்றவள் மீனாட்சி. அகந்தை எனும்
கிழங்கை தம் உள்ளத்தில் இருந்து தோண்டி எறிபவர்கள்
அடியார்கள். அந்த அடியார்களின் மனக்கோயிலில்
ஏற்றப்படும் விளக்குப் போன்றவள் மீனாட்சி.


முன்