தன் மதிப்பீடு - I : விடைகள்

2.

மொழிநடையின் தெளிவுக்கு இலக்கிய     ஆசிரியர்
கடைப்பிடிக்கவேண்டிய கொள்கைகள் யாவை?

சொல்ல வந்த பொருளை நேரே சொல்வது;
பொருளைத் திரித்து மாறுபடச் சொல்லாமலிருப்பது;
அவசியமில்லாத         அடைமொழிகளைச்
சேர்க்காமலிருப்பது; உலகத்தார்க்குப்     பொருள்
விளங்கும்படி எழுதுவது; மனமறிந்த உண்மையை
அச்சமின்றி உள்ளவாறே சொல்வது. இவை யாவும்
நடையின் தெளிவுக்கு இலக்கிய ஆசிரியன் உறுதியாகக்
கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் என்று
பாரதி காட்டுகின்றார்.
 

முன்