தன் மதிப்பீடு - II : விடைகள்

5.

சந்திரத்தீவு கட்டுரையில் இராஜா கங்காபுத்திரன்
மந்திரிக்குக் கூறிய மறுமொழி என்ன?

பெண் சரீர பலத்தில் ஆணைக் காட்டிலும்
குறைந்தவள். அவளாலே ஸ்வாதீனமாக வாழ
முடியாது. தனிவழி நடக்கையிலே துஷ்டர் வந்து
கொடுமை செய்தால் தன்னைக் காத்துக் கொள்ள
வலியில்லாதவள். குழந்தை ஸம்ரக்ஷணம் முதலிய
அவசியங்களாலே உழுது பயிரிட்டுத் தொழில் புரிந்து
ஜீவனம் செய்வதில் இயற்கையிலே பெண்ணுக்குப்
பல தடைகள் ஏற்படுகின்றன. அப்போது அவள்
ஆஹார நிமித்தமாக ஆணைச் சார்ந்து நிற்றல்
அவசியமாகிறது. பிறன்கைச் சோற்றை எதிர்
பார்த்தால் அவனுக்கடிமைப்படாமல்     தீருமா?
என்றான்.

முன்