பாரதியின் உரைநடை
இலக்கியங்களுள் அவருடைய கட்டுரைகளுக்குத் தனியிடமுண்டு. அவை அரசியல், சமூகம், கலை, தத்துவம் முதலான பல
வகைப்பட்ட பொருள்களையும் தழுவி அமைந்திருப்பதால் பாரதியின் ஆளுமை, தனித்தன்மை, அறிவு, இலக்கியப் பயிற்சி முதலியவற்றை அவற்றின் வாயிலாக நன்கு கண்டுகொள்ள இயல்கின்றது. குறிப்பாக, பாரதியின் கட்டுரைகளின் அமைப்பும் அவற்றில் காணப்படும் தெளிவும் அவற்றைத் தமிழ் வசன இலக்கியத்தில் முதலிடத்தில் நிறுத்துகின்றன. பாரதி அவற்றை அமைத்திருக்கும் வகை, போக்கு முதலானவை
பொருள்களைப் பற்றிய அவரது ஆழ்ந்த சிந்தனைகளின் முடிவுகள் எத்துணைத் தெளிவானவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆழ்ந்த சிந்தனை, முறையான சிந்தனை, குழப்பமற்ற தெளிந்த சிந்தனை ஆகியவற்றின் விளைவாகப் பிறந்தனவே பாரதியின் கட்டுரைகள் ஆகும். பாரதியின் கட்டுரைகள் மூலம் பாரதியின் உரைநடைத் திறனை நன்கு புரிந்து கொள்ள
முடிகிறது. |