செந்தமிழ்
பாட ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
தமிழ் மொழியின் வரலாறு என்ற நூலை எழுதியவர் வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார் ஆவார். இவர் தன் பெயரை நல்ல தமிழில் பரிதி மால் கலைஞர்என மாற்றிக் கொண்டார்.
சூரிய நாராயண சாத்திரி என்பது சமற்கிருதப் (வடமொழி) (Sanskrit) பெயராகும். அதனை அவர் பின்வருமாறு நல்ல தமிழில் அமைத்துக் கொண்டார்.
| வடமொழி | தமிழ்மொழி |
|---|---|
| சூரிய(ன்) | பரிதி |
| நாராயண(ன்) | மால் (திருமால் என்பதன் சுருக்கம்) |
| சாத்திரி | கலைஞர் |
சூரிய + நாராயண + சாத்திரி = சூரிய நாராயண சாத்திரியார் = பரிதி + மால் + கலைஞர் = பரிதி மால் கலைஞர்.
இவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தலைமைத் தமிழ் ஆசிரியராக இருந்தவர். பல தமிழ் நூல்களை எழுதியவர்.