பெயர்ச்சொல்
பாடம்
Lesson
|
|
| மரம் | நாய் |
|
|
| கல் | மண் |
படங்களைப் பார்த்தீர்களா?
படங்கள் ஒவ்வொன்றின் கீழும் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
(1) மரம்
(2) நாய்
(3) கல்
(4) மண்
இந்தச் சொற்கள் எல்லாம் ஒரு பொருளின் பெயரைத் தருகின்றன. எனவே ஏதாவது ஒன்றின் பெயராக அமையும் சொல் பெயர்ச்சொல் எனப்படுகிறது.
• பெயர் வைக்கப்படும் முறைகள்
ஒரு பொருளுக்கு எப்படி அந்தப் பெயர் ஏற்பட்டது என்று சிந்திப்போமா மாணவர்களே!
|
|
|
| மொட்டு | பூ |
மொட்டு பூவாகப் பூக்கின்றது.
எனவே பூத்த ஒன்றுக்குப் பூ என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.
பறவை
பறக்கின்ற ஒன்றுக்குப் பறவை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு ஒரு காரணம் கருதிப் பெயர் வைக்கும் முறை தமிழ் மொழியில் உண்டு. இவ்வாறு வைக்கப்படும் பெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படுகின்றன.
|
|
|
| மரம் | மண் |
மரம், மண் இது போன்ற பல சொற்கள் காரணம் இல்லாமல் வைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு காரணம் இல்லாமல் தமிழ்மொழியில் பெயர்கள் உள்ளன.அவை இடுகுறிப் பெயர்கள் எனப்படுகின்றன.
ஒரு பொருளுக்கு எப்படிப் பெயர் ஏற்பட்டது என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
நமக்கு ஒரு பெயர் உண்டு அல்லவா? அது காரணப் பெயரா? இடுகுறிப் பெயரா? சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
• பெயர்ச்சொல்லின் வகைகள்
பெயர்ச்சொற்கள் ஆறு வகைப்படும். அவை,
| 1. | பொருளின் பெயர் | - பொருட்பெயர் |
| 2. | இடத்தின் பெயர் | - இடப்பெயர் |
| 3. | காலத்தின் பெயர் | - காலப் பெயர் |
| 4. | ஒரு முழுப்பொருளினது சிறுபகுதியின் பெயர் | - சினைப்பெயர் |
| 5. | பண்பின் பெயர் | - பண்புப்பெயர் |
| 6. | தொழிலின் பெயர் | - தொழிற்பெயர் |
|
|
- இடப்பெயர் | ||
| கோவில் | பள்ளி | |||
|
|
- காலப்பெயர் | ||
| கோடை (காலம்) | நாட்காட்டி | |||
|
- சினைப்பெயர் | |||
| இலை | ||||
|
|
- பண்புப்பெயர் | ||
| வடிவம் | பசுமை வண்ணம் | |||
|
|
- தொழிற்பெயர் | ||
| படித்தல் | எழுதுதல் |
இவ்வாறு ஆறுவகைப் பட்ட பெயர்ச்சொற்கள் தமிழில் உள்ளன.