யாப்பு
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
தமிழ் இலக்கண வகைமை வரிசையில் நான்காம் இடம் பெறுவது யாப்பு என்னும் இலக்கணக்கூறு ஆகும். கற்களை அடுக்கிக் கட்டுவதுபோல், சொற்களை அடுக்கிக் கட்டுவது செய்யுள் அல்லது பாட்டு எனப்பெறும். பாட்டுக் கட்டுகிறேன் என்று பேச்சு வழக்கிலும் சொல்லக் கேட்டிருக்கிறோம். கட்டுதல் என்பதையே யாத்தல் என்றும் கூறுவர். அதுவே இலக்கணத்தில் யாப்பு என்று கூறப்பெறுகின்றது.
இப்பாடம் யாப்புத் தொடர்பானப் பல கூடுதல் இலக்கணச் செய்திகளை உங்களுக்கு வழங்குகின்றது.