அல்லா
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. சீறத்துந் நவி என்பது எந்த மொழித் தொடராகும்?
சீறத் என்பது அரபு மொழித் தொடராகும்.
2. சீறாப்புராணம் எனப் பெயர் பெற்றது எது?
நபிகள் நாயகத்தின் புகழ் மிக்க வரலாற்றைக் கூறுவதால் சீறாப்புராணம் எனப் பெயர் பெற்றது
3. இறைவன் எப்படி உள்ளான் என கூறுகிறார் உமறுப்புலவர்?
இறைவன் பேரொளியாய், பரம்பொருளாய் அழியாத பெரும் பேறாய் நிற்கிறான்
4. இறைவன் என்னும் பொருள் தரும் சொல்லை உமறுப்புலவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
இறைவன் என்னும் பொருள் தரும் சொல்லை பரம்பொருள் என்று உமறுப்புலவர் குறிப்பிடுகிறார்..
5. உமறுப்புலவர் எழுதிய நூலின் பெயர் என்ன?
உமறுப்புலவர் எழுதிய நூலின் பெயர் சீறாப்புராணம்.
6. சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களை உடையது?
சீறாப்புராணம் மூன்று காண்டங்களை உடையது.
7. சீறத்துந் நபி என்பதன் பொருள் என்ன?
திரு நபி புகழ் மிக்க வரலாறு என்பது பொருள்.
8. உமறுப்புலவர் எந்த ஊரில் பிறந்தார்?
உமறுப்புலவர் நெல்லைக்கு அருகில் உள்ள நாகலாபுரத்தில் பிறந்தார்.
9. உமறுப்புலவரின் தந்தையின் பெயர் என்ன?
உமறுப்புலவரின் தந்தை பெயர் செய்கு முகம்மது அலியார்.
10. உமறுப்புலவர் எவரிடம் தமிழ் பயின்றார்?
உமறுப்புலவர் கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் பயின்றார்.