அல்லா
பயிற்சி - 3
Exercise 3
1. சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) இளங்கோவடிகள்
இ) உமறுப்புலவர்
ஈ) கடிகை முத்துப் புலவர்
இ) உமறுப்புலவர்
2. உமறுப்புலவரின் தந்தை பெயர் என்ன?
அ) செய்கு முகம்மது அலியார்
ஆ) கபூர்கான்
இ) கடிகை முத்துப் புலவர்
ஈ) கான் சாகிபு
அ) செய்கு முகம்மது அலியார்
3. உமறுப்புவலர் பிறந்த ஊர்
அ) நந்திமங்கலம்
ஆ) நாகபுரி
இ) நாகலாபுரம்
ஈ) நாகேச்சுரம்
இ) நாகலாபுரம்
4. கடிகை முத்துப் புலவர் எங்கு அரசவைக் கவிஞராய் இருந்தார்?
அ) எட்டயபுரம்
ஆ) தூத்துக்குடி
இ) நாகலாபுரம்
ஈ) மதுரை
அ) எட்டயபுரம்
5. சீறத் என்னும் அரபு மொழி எதனைக் குறிக்கும்?
அ) வரலாறு
ஆ) சிறுகதை
இ) புதினம்
ஈ) புராணம்
அ) வரலாறு
6. நபிகள் நாயகத்தின் புகழ் மிக்க வரலாற்றைக் கூறுவது
அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) இயேசு காவியம்
ஈ) சீறாப்புராணம்
ஈ) சீறாப்புராணம்
7. உமறுப்புலவர் யாரிடம் தமிழ் பயின்று பெரும்புலவரானார்?
அ) சேக்கிழார்
ஆ) புகழேந்திப் புலவர்
இ) திரு.வி.க
ஈ) கடிகை முத்துப் புலவர்
ஈ) கடிகை முத்துப் புலவர்
8. சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களை உடையது?
அ) ஐந்து காண்டங்கள்
ஆ) ஆறு காண்டங்கள்
இ) மூன்று காண்டங்கள்
ஈ) ஏழு காண்டங்கள்
இ) மூன்று காண்டங்கள்
9. சீறாப்புராணம் முதலில் எந்த மொழியில் அமைந்திருந்தது?
அ) தமிழ்
ஆ) அரபு
இ) இந்தி
ஈ) வடமொழி
ஆ) அரபு
10. சீறாப்புராணம் எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
அ) 5027
ஆ) 6071
இ) 5029
ஈ) 5091
அ) 5027