அல்லா
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. உமறுப்புலவர் ----------- அருகிலுள்ள நாகலாபுரத்தில் பிறந்தார்.
உமறுப்புலவர் நெல்லை அருகிலுள்ள நாகலாபுரத்தில் பிறந்தார்.
2. உமறுப்புலவரின் தந்தை பெயர் ----------------- ஆகும்.
உமறுப்புலவரின் தந்தை பெயர் செய்கு முகம்மது அலியார் ஆகும்.
3. உமறுப்புலவர் ----------- புலவரிடம் தமிழ் பயின்றார்.
உமறுப்புலவர் கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் பயின்றார்.
4. பெரும்புலவரான உமறுப்புலவர் -------------- அரசவைக் கவிஞர் ஆனார்.
பெரும்புலவரான உமறுப்புலவர் எட்டயபுர அரசவைக் கவிஞர் ஆனார்.
5. ------------ என்பது அரபு மொழித் தொடராகும்.
சீறத்துந் நபி என்பது அரபு மொழித் தொடராகும்.
6. இறைவன் -----------, -------------- அழியாத பெரும் பேறாய் எக்காலத்திலும் எவ்விடத்திலும் இருப்பான்.
இறைவன் பேரொளியாய், பரம்பொருளாய் அழியாத பெரும் பேறாய் எக்காலத்திலும் எவ்விடத்திலும் இருப்பான்.
7. சீறாப்புராணம் ----------- பாடல்களைக் கொண்டது.
சீறாப்புராணம் 5027 பாடல்களைக் கொண்டது.
8. இறைவன் எல்லா உயிர்களும் அறிவதற்கான ------------- இருக்கிறான்.
இறைவன் எல்லா உயிர்களும் அறிவதற்கான உணர்வாக இருக்கிறான்.
9. சீறாப்புராணம் --------- காண்டங்களை உடையது.
சீறாப்புராணம் மூன்று காண்டங்களை உடையது.
10. சீறாப்புராணம் ---------- படலங்களைக் கொண்டது.
சீறாப்புராணம் 92 படலங்களைக் கொண்டது.