அல்லா பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என
அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1

அல்லா பேரொளியாய் பரம்பொருளாய் இருக்கிறார்.

2

சீறாபுராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.

3

சீறத் என்பதற்கு வரலாறு என்று பொருள்.

4

புராணம் என்பது புதுமையான வரலாறு.

5

உமறுப்புலவர் நெல்லைக்கு அருகில் உள்ள நாகலாபுரத்தில் பிறந்தார்.

6

உமறுப்புலவரின் தந்தை பெயர் செய்கு முகம்மது அலியார்.

7

உமறுப்புலவர் எட்டயபுர அரசவைக் கவிஞர் ஆனார்.

8

உமறுப்புலவர் கம்பரிடம் தமிழ் பயின்று பெரும் புலவரானார்.

9

சீறாப்புராணம் 92 படலங்களைக் கொண்டது.

10

சீறாப்புராணம் நபிகள் நாயகத்தின் புகழ் மிக்க வரலாற்றைக் கூறும் புராணமாகும்.