முகப்பு தொடக்கம்

வழக்கன்மையின்,  அது  கொள்ளற்க  என விலக்கினாரெனினும், ஆசிரி்யர் கூறியதனால்       அவை       அக்காலத்துப்      போலியெழுத்தாகப் பயின்றுவந்தனவென்பதே  துணிபாம்  இனி,  அகர  இகரம்  அகர உகரம் இகரம்  என்னும்  மூன்றும்,  முறையே  ஐ  ஒள  ய் என்னும் மூன்றற்கும் போலியாக,      இக்காலத்துப்      பயின்றுவாராமையின்     அவற்றை நச்சினார்க்கினியர் விலக்கினா ரெனினுமமையும்; பிரயோகவிவேக நூலார்க்கு மிதுவே கருத்தாதல்,   "அ  இ,  அ  உ   என்பனவும்,    இக்காலத்துப் பயன்படாமலே நின்றனவெனினுமமையும்" எனவுரைத்தமையானறிக.  

இனி  உரையாசிரியர்,   'அகர   விகர   மைகார   மாகும்'   என்பத னுரையின்கண்மாத்திரம்  விலக்கி ஏனையவற்றினுரையிற் கூறாது ஒன்றற்குக் கூறியதே  ஏனையவற்றிற்கும்  அமையுமென  விடுத்தாராதலின், அவ்வாறே நச்சினார்க்கினியரும்  விடுத்தாரெனல்   அமையுமெனின்,  அங்ஙனமன்று ; 'உரையாசிரியர்  அதுகொள்ளற்க  என  விலக்காமை அவருரையிற் காண்க எனப்  பிரயோகவிவேகநூலார்  கூறினமையானே   உரையாசிரியர்   அது கொள்ளற்க    எனக்    கூறினாரல்லர்   என்பது   பெறப்படுதலினாலும், நச்சினார்க்கினியர்  முன்னும்  பின்னும்  விலக்கினமையானும், அவர் அகர யகரத்தையும்   அகர   வகரத்தையும்   செய்யுட்கண்   வழங்கல்   பற்றி விலக்காதொழிந்தனர்       என்பதே       துணிபாம்.      அங்ஙனேல் உரையாசிரியருரையில்  ஓரிடத்திற்  காணப்படுத  லென்னையெனின், அது எழுது வோரால் இடைச்செருகலாய் நேர்ந்த வழுவாகும்.  

மேலும், முதியோர் சிலர், ஐயன் என்பதற்கு அய்யன் என்றும்,  ஒளவை என்பதற்கு  அவ்வை  என்றும்  எழுதலையாம் இக்காலத்துக்  கண்கூடாகக் கண்டிருக்கின்றேம்.    ஆதலின்    அக்காலத்தும்    அவ்வாறு   எழுதி வழங்கினமைகண்டு ஆசிரியர் தொல்காப்பியர் சூத்திரஞ்  செய்தாரென்பதே துணிபாம். அவர்வழி யாத்தமையின்  நன்னூலாரும்  அவ்வாறே  செய்தார். நன்னூலார் வடமொழி மதத்தை மேற்கொண்டவராதலின், இச் சூத்திரத்தையு மவ்வாறே   கொண்டு   கூறினாரென்றா லென்னையெனின்,   அவ்வாறு கொண்டிலரென்பது    யாங்கூறிய    சூத்திரப்    பொருளானும் இது சந்தியக்கரமுணர்த்தியதெனப்


முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்