இனி, வடமொழியில் வரும் ஏ, ஓ, ஐ, ஒள என்னும் எழுத்துக்களையும்
சந்தியக்கரமென்று கூறுவதினும்,
அவை போல அகரவிகர முதலிய
எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கு
மென்பதே பொருத்தம்போலும்.
எங்ஙனமெனின் :- சந்தியிலே (புணர்ச்சியிலே)
பதத்தினிறுதியில்வரும்
அகரத்திற்கும், பதமுதலில்வரு
மிகரத்திற்கும் அவ்விரண்டன் பிறப்பிடத்தையும் தனக்குப் பிறப்பிடமாகக்கொண்ட
ஏ என்னு மெழுத்து
ஆதேசமாக வருதலின்,
அவ்விரண்டனொலியும் அமைந்தமை
பெறப்படுமாதலின், ஏனையவு மிவ்வாறே
யமைந்தமை வடமொழிச்
சந்தியிலக்கணம் நோக்கியுணர்க. அன்றி,
இரண்டெழுத்துக் கூடியவெனில்,
அவற்றைத் தனி எழுத்தாக வைத்து
மகேசுரர் சூத்திரஞ் செய்யார்.
அவ்வாறே தமிழிலக்கண
நூலாசிரியர்களாகிய தொல்காப்பியர்
முதலியோரும் ஐ ஒள என்பவைகள் சந்தி
எழுத்தாயின் அவற்றைத்
தனியெழுத்தாக வைத்துச் சூத்திரஞ்
செய்யார். ஆதலின், ஐ ஒள
என்பவைபோல அ இ, அய்; அஉ, அவ்
என்பவை ஒலிக்குமென்பதே
அவ்வாசிரியர்கள் கருத்தென்பது துணிவாதல் காண்க.
|