முகப்பு

தொடக்கம்


பதிப்புரை

தொல்காப்பியச்     சொல்லதிகார உரியியல் உரைவளம் என்னும்
இந்நூல்   உலகத்தமிழாராய்ச்சி  நிறுவனத்தின்  தொல்காப்பிய  நூல்
உரைவள   வெளியீட்டுத்  திட்டத்தின்  மூலம்  வெளிவரும்  19ஆம்
வெளியீடாகும்.

இதில்     இளம்பூரணர்,    சேனாவரையர்,   தெய்வச்சிலையார்,
நச்சினார்க்கினியர்  ஆகியோர்  உரைகளும்  வெள்ளை  வாரணனார்,
ஆதித்தர்  ஆகியோர் உரைகளில் தேவையான குறிப்புகளும் இக்கால
அறிஞர்     பெருமக்களின்     கருத்துரைகளும்     பதிப்பாசிரியர்
கருத்துரைகளும்   உள்ளன.   டாக்டர்  சி.  இலக்குவனார்,  டாக்டர்
தே.ஆல்பர்ட்  ஆகியோரின்  உரியியற்  சூத்திரங்களுக்கான ஆங்கில
மொழிபெயர்ப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

நூல்  வெளிவர  உதவியவர்கள் டாக்டர் வை. இரத்தின சபாபதி,
புலவர்  க.வா.  சச்சிதானந்தம்  ஆகியோர்.  அச்சாகுங்கால்  துணை
புரிந்தோர்   டாக்டர்  பூ.  சுப்பிரமணியம்,  நிறுவன  டாக்டர்  பட்ட
ஆய்வாளர் திரு. பெ. அனந்தசயனம் ஆகியோர். இவர் தமக்கு யான்
என்றென்றும் கடப்பாடுடையேன்.

உரைவள வெளியீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து என்னைத்
தமிழுலகுக்குச் சிறப்பாக அறிமுகப் படுத்தியவரும் நிறுவன முன்னாள்
இயக்குநரும்  ஆம்  டாக்டர்  ச.வே.  சுப்பிரமணியன்  அவர்கட்குப்
பெரிதும் நன்றியுடையேன்.

இந்நாள்    இயக்குநர்   டாக்டர் அ. நா. பெருமாள்  அவர்கள்,
அத்திட்டத்தைத்தொடர்ந்து  செயல்படுத்தி  மேலும்  சிறப்புச் செய்து
வருவதற்கு,  ஆக்கமும்  ஊக்கமும் அளித்துவரும் பெருந்தன்மைக்கு
என்றும் கடப்பாடுடையேன்.

நிறுவனத்     தலைவரும்  தமிழகக்  கல்வி  அமைச்சரும் ஆம்
மாண்புமிகு  சி. பொன்னையன் அவர்கட்கும் அழகுற அச்சிட்டுதவிய
கோமதி அச்சக உரிமையாளர் சி. சரவணகுமார் அவர்கட்கும் நன்றி.

   ஆ. சி.
சென்னை 20-10-87


மேல் அடுத்த பக்கம்