xv சொல்லாவது
பெயர்ப்பொருளுக்கு அல்லது வினைப்பொருளுக்கு உரிமைப்
படுத்தப்படுஞ் சொல்” என்பதாம். உரிச்சொல் குறைச்சொல் காரணம்:
தொல்காப்பியர் ‘குறைச்சொல்’ என்னும் தொடரை இரண்டிடங்களில் ஆள்கிறார்.
ஓரிடத்தில் ‘குறைந்த சொல்’ எனத் தன்வினைப் பொருளிலும்
(செய்வினையிலும்) (எழுத்துகுற்றிய 77). பிறிதோரிடத்துக் ‘குறைக்கும்
சொல்’ எனப் பிறவினைப் பொருளிலும் (செயப்பாட்டு வினையிலும்) (தொல். சொல்.
எச்ச.57) ஆண்டுள்ளார்.
தன்வினை செய்வினைப் பொருளில் ஆளப்பட்ட ‘குறைச்சொல்’ என்பது
உரிச்சொல்லைத்தான் குறிக்கும் என்பதை, “குறிப்பினும் பண்பினும்
இசையினும் தோன்றி நெறிப்படவாராக் குறைச்சொல்” (குற்றிய.77) எனக்
கூறியவாறே, உரியியல் முதற் சூத்திரத்திலும் “உரிச்சொற் கிளவி
விரிக்குங் காலை இசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றி” வரும்
என்றமையால் அறியலாம்.
இனி, உரிச்சொல்லைக் ‘குறைச்சொல்’ என்றது ஏன் எனக் காண்போம்.
‘நெறிப்பட வாராக் குறைச்சொல்’ என்றதனால், நெறிப்பட
வாராமையே குறை’ என்னலாம். நெறிப்பட வாராமையாவது உயிரீற்றுச் சொல்லா
மெய்யீற்றுச் சொல்லா என அறிய முடியாதபடி வருவது என நச்சினார்க்கினியர்
கருதினார். குறைச் சொல் என்பதற்குச் சொல் தன்மை குறைந்த சொல் என்றார்.
அவர் கூற்று:
“கண் விண்ண விணைத்தது, விண் விணைத்தது இவை குறிப்புரிச்சொல்;
ஆடை வெள்ள விளர்ந்தது, வெள் விளர்ந்தது இவை பண்புரிச்சொல்;
கடல் ஒல்ல ஒலித்தது ஒல் ஒலித்தது இவை இசையுரிச்சொல். இவை உயிரீறாயும்,
புள்ளியீறாயும் நிற்றலான் ஒன்றன்கண் அடங்காமையின் நெறிப்பட வாரா என்றார்.
விண்ண விணைத்தது தெறிப்புத் தோன்றத் தெறித்தது என்றும் விண் விணைத்தது
தெறிப்புத் தெறித்தது என்றும் ஆம். இங்ஙனம் நிற்றலின் தன்மை குறைந்த
சொல்லாயிற்று.” உரியியல் 1 உரை)
இக்கூற்றிலிருந்து தெறிப்பை யுணர்த்துஞ் சொல் ‘விண்ண’ வெனும் உயிரீற்றுச்
சொல்லா, ‘விண்’ எனும் மெய்யீற்றுச் சொல்லா என அறிய முடியா நிலைமையில் சொல்
தன்மை |