xvi
குறைந்த காரணத்தால்
குறைச்சொல் என உரிச்சொற்குப் பெயராயிற்று என்பது புலப்படும்.
உரு, உறு, தவ முதலிய உயிரீற்றுச் சொற்களும், பேண், வியல், கமம், வாள்
முதலிய மெய்யீற்றுச் சொற்களும் ஈற்றுத் தெளிவுடையன வாதலின் அவை
குறைச் சொல் எனப்படா. அதனால் நச்சினார்க்கினியர் கருத்து
சிறவாது. இனிக்
குறைச் சொற் காரணம் பின் வருமாறு காணலாம். இருதிணை ஐம்பாற்
பெயர்களை அவற்றின் ன், ள், ர், து, அ முதலிய இறுதி எழுத்துக்களால் உணர
முடியும். பொருளிடம் காலம் சினை குணம் தொழிற் பெயர்களை
இறுதி எழுத்துக்களாலன்றி வெளிப்படைப் பொருள்களால் உணர
முடியும். ஆனால் உரு, கலி, ஒற்கம் முதலிய சொற்கள் பெயர்ப்
பொருள்களைத் தந்தாலும் ஈற்றெழுத்துகளாலோ வெளிப்படைப் பொருள்களாலோ பெயர்ச்
சொல் என அறிய முடியவில்லை. அதனால் அவற்றைப் பெயர்ச்சொல்
என்பதற்கில்லை. நம்பு, படர், புலம்பு போலும் சொற்கள்
வினைப்பொருள் தருவது. ஆனால் இருதிணை ஐம்பால் உணர்த்தும் வினையிறுதி
எழுத்துகள் (ன், ள், ர், து, அ) இன்மையாலும் வெளிப்படையாகவும்
வினைப் பொருள் உணர்த்தாமையாலும் அவற்றை வினைச் சொற்கள்
என்பதற்கில்லை. எனவே பெயரிலும் வினையிலும் சேராக்குறை
அவற்றுக்குண்டு. எனவேதான் உரிச்சொல் குறைச்சொல் எனப்பட்டது.
உரிச்சொல் வேர்ச்சொல்லா?
பெயர் வினைகளின் வேர்ச்சொற்களே உரிச்சொற்கள் என்பர் தெ. பொ. மீ.
போல்வார். (இலக்கண ஆய்வுக் கட்டுரை பக். 123). “உரிச்சொற்களையெல்லாம்
வேர்ச்சொற்கள் என்றோ வினை வேர்கள் என்றோ கூறுதல் பொருந்தாது” என்பர் மோ.
இசரயேல் (இடையும் உரியும் பக்.123). தெய்வச்சிலையார் உரிச்சொற்களைத் தாது
என்று கூறியது முதலாமவர்க்கு உறுதுணை. ஆசிரியர் தொல்காப்பியர்க்கு,
வேர்ச்சொற்களே உரிச்சொற்கள் என்னும் கருத்தில்லை என்பதை அவர்
உரிச்சொற்களைக் கூறிய வகைகளால் அறியலாம்.
பெயர்ப் படுத்தியோ, வினைப்படுத்தியோ அறிய முடியாத தவ, நனி, ஏ,
மழ, குழ போலும் சொற்களையும், பகுதி விகுதிகளாகப் பிரித்துக் காணக்
கூடிய கூர்ப்பு, கழிவு, வார்தல் போலும் சொற்களையும், ‘நிழத்த
யானை’ எனப் பெயரெச்சமாகத் திரித்தற் கேற்ற தாயினும் பெயரெச்ச
உருபாகிய ‘அ’ என்பதை நீக்கின் பகுதியை இன்னதென வரையறுக்க இயலாத
‘நிழத்தல்’ என்னும் சொல்லையும், தொழிற் பெயராகப் |