xii என்பது போலக் கூறுதலும், இன்னது செய் என்று சொல்லாதவற்றை ‘இம் மலர் என்னைப் பறித்துக் கொள் என்கின்றது’ என்பது போலக் கூறுதலும் அவற்றின் தன்மைகளை விளக்குவனவாம். (26) அவையில் சொல்லத்தகாத சொல்லை மறைத்து அதன் பொருளைக் குறித்துக் கொள்ளும்படி வேறு சொல்லால் சொல்லுதல் வேண்டும். ‘கால் கழீஇ வருவேம்’ என்பது (46) மறைக்கும் போது எல்லாச் சொற்களையும் மறைத்தல் வேண்டுவதில்லை. மறைக்காமல் வழங்கி வருவனவற்றை அப்படியே வழங்கலாம். ஆட்டுப் பிழுக்கை என்பது. (47) ஈ, தா, கொடு என்பன பிறரிடம் ஒன்றை இரப்பவன் கூறும் சொற்கள் ஆதலும் உண்டு. (48) அவற்றுள் ‘ஈ’ என்பது உயர்ந்தவனிடம் இழிந்தவன் இரக்கும் போது வரும்.(49) தா என்பது ஒத்தவனிடம் இரக்கும் போது வரும். (50) கொடு என்பது உயர்ந்தவன் இழிந்தவனிடம் இரக்கும் போது வரும். (51) கொடு என்பது படர்க்கையிடத்துக்குரியது என்பது கிளவியாக்கத்திற் கூறப்பட்டது (கிளவி. 30). அது ஒருவன் தன்னையே பிறன் போலக் கூறும் போது தன்மைக்கும் வரும். எனக்குக் கொடு என்பதற்குப் பதில் தன்னையே சுட்டி ‘இவனுக்குக் கொடு’ என்னும்போது வருதல் காண்க. (52) ஒரு பொருளைத்தர இரண்டு சொற்கள் வரலாகாது. ஆனால் சில விடங்களில் பிரிவில்லாமல் இணைந்து வருதலும் உண்டு அவற்றை நீக்காது ஏற்பர். ‘நிவந்து ஓங்கு பெரு மலை’ என்பதில் நிவப்பும் ஓங்குதலும் உயர்வு என்னும் பொருள் தந்து பிரிவின்றி இருத்தல் காண்க. (64) ஒருமை குறிக்கும் சொல் பன்மையைக் குறிக்கும் இடமும் உண்டு. பெரும்பாலும் செய்யுளில் வரும் ‘வீரர் தாய்’ என்பதில் வீரர் எனும் பன்மைக் கேற்பதாய் என்பது தாயர் எனப் பன்மைப் பொருள் கொள்ளும். (65) |