முகப்பு

தொடக்கம்

xi

இன்றி வெவ்வேறிடங்களில் வரிசையாக இருந்து கருதிய பொருள்களைக் கொள்ளுமாறு அமைவதுநிரல் நிறைப்பொருள் கோளாம். இது பெயர் நிரல் நிறை, வினை நிரல்நிறை பெயர், வினை நிரல் நிறை என மூவகையாகவும், பெயரொடு பெயர், பெயரொடு வினை, வினையொடு பெயர், வினையொடு வினை என நான்கு வகையாகவும் வரும். வரிசை முறையில் இன்றி எதிர் வரிசையாகவரின் எதிர் நிரல் நிறை எனப்படும். (9)

சுண்ணப் பொருள் கோள் என்பது நாற்சீரடி இரண்டனுள் அதாவது ஈரடி எண் சீர்களுள் சுண்ணம் (பொடி) போலச் சிதறிக்கிடக்கு சொற்களைப் பொருட் பொருத்தத்துக்கேற்ப அமைத்துக் கொள்ளுமாறு அமைவதாம். (10)

அடிமறி மாற்றுப் பொருள்கோளாவது நாலடிச் செய்யுளில் இருந்தபடியே இருக்க அடிகளைமட்டும் எவ்வடியை எவ்விடத்து மாற்றினாலும் பொருள் கெடாதவாறு அமைவதாம்.(11)

என்றாலும் இறுதியடியில் வரும் இறுதிச்சீர் எருத்தடியில் (மூன்றாமடியில்) சென்று அமையினும் அடிகளை மாற்றுதற்கமைதலின் அதுவும் அடிமறி மாற்றாகும். (12)

மொழி மாற்றுப் பொருள்கோளாவது நாலடிச் செய்யுளில் சீர்களைப் பொருட் பொருத்தத்துக் கேற்ப எவ்வடியில் வேண்டுமானாலும் மாற்றியமைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைவதாம். (13) சுண்ணமொழி மாற்று ஈரடி எண்சீரில் அமைவது; இது பல வடிகளில் அமைவது.

இது வரை கூறப்பட்டன கூறாதொழிந்த செய்யுள் ஒழிபுகள்.

2. கிளவியாக்க ஒழிபுகள்

கிளவியாக்கத்துள் திணை, பால், எண், இடம், வினா, செப்பு, மரபு என்னும் ஏழனைப்பற்றி வரும் வழுக்களும் அமைதிகளும் விரிக்கப்பட்டன.  அங்கு விடுபட்ட வழுவமைதிகள் எச்சவியலில் கூறப்பட்டுள்ளன.

வராதவற்றை அதாவது வருதல் தொழில் செய்யாதவற்றை ‘இந்த நெடுஞ்சாலை புதுவையிலிருந்து வருகிறது,

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்