முகப்பு

தொடக்கம்

x

தும், கோழி, சங்கு, யானை என்ற பல பொருள்களைக்குறிக்க வாரணம் என ஒரு சொல் வருவதும் ஆகும். (3)

செந்தமிழ்நாடு ஒரு காலத்தில் தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூமி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புனல்நாடு எனப்பன்னிரு பிரிவுகளாக இருந்தது. அப்பன்னிரு நாடுகளிலும் தனித்தனிச் சிறப்பாக வழங்கிய சொற்கள் மற்றை நாடுகளில் சென்று வழங்கியதும் உண்டு. அச்சொற்களே திசைச்சொற்கள் எனப்பட்டன. மேலும் தமிழ் நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் வந்து வழங்கிய பிறமொழிச் சொற்களும் திசைச்சொற்கள் எனப்பட்டன. 4)

வடசொல் என்பது வடமொழிச்சொல். அது தமிழில் வந்து வழங்கும் போது வடசொல் எனப்படும். தமிழில் வழங்கும் போது எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் வடவெழுத்தையும் ஒலியையும் விட்டுத் தமிழ் எழுத்திலும் தமிழ் ஒலியினும் வழங்கும். (5,6)

மேற்கூறப்பட்ட நான்கு சொற்களும், செய்யுளில் எதுகை மோனை முதலிய நலம் கருதி, வல்லெழுத்தை மெல்லெழுத்தாகவும், மெல்லெழுத்தை வல்லெழுத்தாகவும், இயல்புக்கு மாறாக எழுத்தை விரித்தும், எழுத்தைத் தொகுத்தும், குறிலை நெடிலாகவும், நெடிலைக் குறிலாகவும் அமைக்கப்படும். (7)

2. பொருள் கோள்-

செய்யுளில் உள்ள சொற்கள் செய்யுட் பொருளை விளக்குங்கால் இருந்தாங் கிருந்து யாற்று நீர் ஒழுக்குப்போல அமைவதே யன்றி மாறியமைந்து நின்று முடிவதும் உண்டு. அவ்வாறு மாறி நின்ற சொற்களைப் பொருட் பொருத்தத்துக் கேற்ப மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு மாற்றிக் கொள்வதைப் ‘பொருள்கோள்’ என்பர். அப்பொருள்கோள், நிரல் நிறை, சுண்ணம், மொழி மாற்று, அடிமறி என்னும் நான்கு வகைப்படும். இப்பொருள்கோள் ‘மொழிபுணர் இயல்பு’ எனப்படும் (8)

அவற்றுள் நிரல் நிறைப்பொருள் கோளாவது:-

ஒன்றற்கு மேற்பட்ட பெயர்களும் வினைகளும், முடிக்குஞ் சொற்களாகவும் முடிக்கப்படும் சொற்களாகவும் நேருக்குநேர்

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்