முகப்பு

தொடக்கம்

xiv

உவமத் தொகையாவது உவம வுருபு விரிந்திருந்தால் எப்பொருள் தருமோ அப்பொருளை அவ்வுருபு மறைந்திருந்த போதும் தருமாறு அமைவது (18) மதிபோலும் முகம் என்பது மதிமுகம் என வருவது.

வினைத் தொகையாவது, வினையின் சிறப்பிலக்கணம் காலம் காட்டுவது; அக்காலம் காட்டு இடைநிலை முதலிய உருபுகள் விரிந்திருந்தால் அவ்வினை என்ன காலம் காட்டுமோ அக்காலத்தை அவ்வுருபுகள் மறைந்திருந்த போதும் குறிப்பாற் காட்டுமாறு அமைவது (13) உயர்ந்தமரம் என்பது உயர்மரம் எனவருவது. பிற காலங்களுக்கும் கொள்க.

பண்புத் தொகையாவது, வண்ணம், வடிவு, அளவு சுவை முதலிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ‘இப்படிப்பட்டது இது’ என்னும் படியாக வருவது. கரிய நிற முடையது குதிரை என்பதுகருங்குதிரை எனவருவது. பிறவும் அன்ன. (20)

உம்மைத் தொகையாவது எவ்வகைப்பெயரும் இருபெயராக அல்லது பலபெயராக எண்ணி வரும்போது எண்ணுப் பொருளில் வரும் ‘உம்’ இன்றிவருவது. கபிலபரணர் என வருவது. (31)

அன்மொழித்தொகை என்பது பண்புத்தொகை மேலும் உம்மைத் தொகைமேலும், வேற்றுமைத் தொகை மேலும் தொடர் இறுதியில் மொழி தொக்கி வருவது. அவை பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை உம்மைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப் பெயர் பெறும். (32) இவற்றோடு வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையையும் உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகையையும் சேர்த்துக் கொள்க.

மேற்சொல்லப்பட்ட ஐந்து தொகைத் தொடர்களுள் வேற்றுமைத் தொகையிலும், வினைத் தொகையிலும், பண்புத் தொகையிலும் உவமைத் தொகையிலும் முன்மொழியில் (நிலைமொழி) பொருள் சிறந்து நிற்கும். வேங்கைப்பூ, உயர் மரம் கருங்குதிரை, மதிமுகம் என்பனவற்றிற் காண்க. வேங்கை மரத்தின் இலை, தளிர் முதலியவற்றைப் பிரித்துக் காணும் போது வேங்கைப்பூ என்பதில் பின்மொழியாகிய (வருமொழியாகிய) பூ என்பதில்

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்