xv பொருள் சிறந்து நிற்கும் அவ்வாறே கருநிறமுடைய பல விலங்குகளுள் குதிரையைச் சுட்ட வேண்டிக் கருங்குதிரை என்னுமிடத்தில் பின்மொழியிற் பொருள் சிறந்து நிற்கும் உம்மைத் தொகையில் கபிலபரணர் என இருமொழி மேலும் பொருள் சிறந்து நி்ற்கும், அன்மொழித்தொகையில் இருமொழிக்கும் அப்பால் பொருள் சிறந்து நிற்கும் ‘பொற்றொடி வந்தாள்’ என்றால் பொன்னிலும் தொடியிலும் பொருள் நில்லாமல் பொன்னாலாய தொடியை அணிந்தாள் மேல் நிற்கும் (23) உம்மைத் தொகைத் தொடரில் உயர்திணைத் தொடராயின் பெயர்களை எண்ணிவந்து இறுதிப் பெயரில் ஒருமையைக் குறிக்கும் இறுதி எழுத்தில்லாமல் பலர்பாலைக் குறிக்கும் எழுத்தால் (விகுதியால்) முடித்தல் வேண்டும் (28) கபிலன் + பரணன் = கபில பரணர் எனக் காண்க. 4. வினையியல் ஒழிபுகள் : வினையியலிற் சொல்லாது விடுபட்ட செய்திகள் பின்வருவன. வினைமுற்று என்பது உயர்திணை அஃறிணை, விரவுத்திணை என்னும் பொருள்களில், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடங்களில், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ உணர்த்தவரும். மூவிடங்களில் காலம் வெளிப்படை குறிப்பாக உணர்த்தவருதலின் வினைமுற்று அறுவகைப்படும். (31) மேற்சொல்லப்பட்டவாறு இன்றி வேறு வகையில் வரும். (32) வினைமுற்றுகள் அடுக்கி வந்தாலும் ஒரு பெயர் முடிபைக் கொள்ளும். உண்டான் உறங்கினான் எழுந்தான், சாத்தன் எனக் காண்க. (33) ‘செய்யாய்’ என்னும் வாய்பாட்டுச் சொல் ‘செல்’ என்னும் வாய்பாட்டில் வருவதுண்டு. ‘உண்ணாய்’ (உண்பாயாக என்பது ‘உண்’ என்று வருவது காண்க. (54) முன்னிலை வினைச் சொல்முன் ‘ஈ’ என்பதோ ‘ஏ’ என்பதோ அவ்விடத்துக்கு ஏற்ற மெய்யை யூர்ந்து வருதலுண்டு, செல் + ஈ -> செல் + ற் + ஈ = சென்றீ, நில் + ஏ -> நில் + ம் + ஏ = நின்மே எனக் காண்க. (55) |