xvi வினை யெச்சச் சொற்கள் தமக்குரிய வாய்பாட்டுப் பொருள்களில் நில்லாமல் வேறு வாய்பாட்டுப் பொருள்களில் நிற்கும் குறிப்பும் உடையவாம். ‘யானை ஒடித்து உண்டு எஞ்சிய கிளை’ என்பதில், உண்டு என்பது செய்து என்னும் வாய்பாட்டுப் பொருளை விட்டு ‘உண்ண‘ எனச் செய என்னும் வாய்பாட்டு்ப் பொருளாதலைக் காண்க (61) 5 வினையியல் இடையியல் ஒழிபுகள் பத்து வகை யெச்சம் பிரிநிலை யெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறை யெச்சம், உம்மை யெச்சம், என வெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என எச்சம் பத்து வகைப்படும். (34) 1 பிரிநிலை எச்சம் இது ஏ ஓ என்னும் இடைச் சொல் பற்றியது. பிரிக்கும் சொல்லைச் சார்ந்த ஏ என்னும் இடைச் சொல் பிரிக்கப்படும் சொல்லோடு முடியுமாறு அமையும் இதில் எஞ்சியிருப்பது பிரிக்கப்படும் சொல். அதைக்கொண்டு முடிவது ‘ஏ’ என்னும் இடைச்சொல். ‘அவனே கொண்டான்’ என்பது ‘பிறர் கொண்டிலர்’ என்பதைக் கொண்டு முடிந்தது காண்க (35) 2 வினையெச்சம் என்பது தெரிநிலையாகவோ குறிப்பாகவோ காலம் உணர்த்தும் வினையை எஞ்சி நிற்பது. உழுது வந்தான், கற்று வல்லன் ஆனான் என்பன காண்க. இவற்றுள் கற்று என்னும் வினையெச்சம் வல்லன் என்னும் குறிப்புவினையைக் கொண்டதாயினும் ஆக்கச் சொல் ஒன்றும் (ஆனான் என்பது) உடன் இருப்பது காண்க. குறிப்பு வினை ஆக்கச் சொல்லுடனேதான் வரும். (36) 3 பெயரெச்சம் பெயரொடு முடியும். ‘உண்ட சாத்தன் (37) 4 ஒழியிசையெச்சம் என்பது, ஒழியிசைப் பொருளில் வரும் இடைச் சொற்கள் (மன், தில், ஓ என்பன) வெளிப்படவாராது ஒழியும் பொருள்களை எஞ்சி நிற்பது. கூரியதோர் வாள்மன் என்பதில் ‘மன்’ என்பது வாள்கூரியதன்று அதாவது திட்பமின்று என்னும் ஒழிந்த பொருளை எஞ்சிநின்றது காண்க. (38) பிறவும் அன்ன. 5 எதிர் மறையெச்சம் என்பது எதிர்மறைப் பொருள்தரும் சொற்களை எஞ்சி நிற்பது. எதிர் மறைப் பொருள் தரும் இடைச்சொற்கள ஏ, ஓ, உம் என்பன. யானே திருடினேன் என்பதில் |