முகப்பு

தொடக்கம்

xvii

‘ஏ’ என்பது இல்லை என்னும் எதிர் மறைப் பொருட் சொல்லை எஞ்சி நின்றது. இப்படிப் பிறவும் காண்க. (39)

6 உம்மையெச்சம் என்பது இரண்டு சொற்களில் உம் வந்து ஒன்றை யொன்று எஞ்சி நிற்பதாம். அப்போது இரண்டற்கும் ஒரே வினைச் சொல்லே வரும். ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான்’ என்பதில் சாத்தனும் என்பதன் உம்மை சாத்தனையும் எஞ்சி நிற்பதும் இரண்டும் வந்தான் என்னும் ஒரு வினையே முடிபாகக் கொள்வதும் காண்க. (40)

எச்ச உம்மை வரவேண்டிய சொல் எச்ச உம்மையில்லாமல் செஞ்சொல்லாக வருமானால் அவ்வெச்சவும்மை கொண்டு முடியும் சொல்லில் உம்மை வந்து இறந்த காலத்துக்கு எதிர் காலமும் நிகழ்காலத்துக்கு எதிர் காலமுமாக மயங்கி வரவும் பெறும். ‘கூழ்உண்டான் சோறும் உண்பான்’, எனவும், ‘கூழ் உண்கின்றான் சோறும் உண்பான்’ எனவும் வருவது காண்க. கூழ் என்பது உம்மையின்றி வந்தது. (41)

7 என் என்னும் எச்சம் வினையை எஞ்சி நிற்கும். ‘கொள்எனக் கொடுத்தான்’ என வரும் (42)

8. 9. 10. சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய மூன்றற்கும் முடிக்கும் சொல் அல்லது சொற்கள் இரா (43) எளினும் குறிப்பால் உணர்ந்து முடிக்கப்படும். (44)

முள் மரத்தைச் செடியாக இருக்கும்போதே களைந்து விடுக; இல்லையேல் மர மானபின் களையமுற்படின் களைவோர் கையைப் புண்படுத்தும்” (குறள்) என்பது, “பகையைத் தொடக்கத்திலேயே அழிக்க; இல்லையேல் அது வளர்ந்து உன்னை அழித்து விடும்” என்பதைக்குறிப்பால் உணர்த்துவது குறிப்பெச்சமாம். இசை என்பது சொல் என்னும் பொருள்தரும். இசையெச்சம் என்பது ஏதேனும் ஒரு சொல் எஞ்ச நிற்பது ஆகும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள். 1)

என்பதில் அது போல எனும் சொல் எஞ்சி நின்றது இசையெச்சமாம்.

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்