முகப்பு

தொடக்கம்

xix

வரும்) மந்திரப் பொருளைக் குறித்த ஆனால் அப்பொருளுக்குரித்தல்லாத சொற்களும் ஆகிய அனைத்தும் வழங்கியவாறே வழங்கப்பெறும் இலக்கணம் கருதித் தவிர்க்கப்படா. (53)

காலவயப்பட்டு வழங்கவரும் புதிய சொற்கள் கடியப் படா (56)

சொற்களைத் தலை, இடை, கடையெனும் மூன்றிடத்தும் உள்ள எழுத்துகளைக் குறைத்து வழங்குதலும் உண்டு (57). உண்டெனினும் நிறை சொல்லாக இருக்கும் போதுதரும் பொருளையே தரும். (58) தாமரை, இல்லை, நீலம் என்பன மரை, இலை, நீல் எனக் குறைக்கப்படினும் அவ்வப் பொருளையே தருதலையறிக.

உடன் இணைந்து வராத மாறுபட்ட சொற்கள் உடன் இணைந்து வரும் இடமும் உண்டு; அறிக, சிறிது பெரிது என்பன உடன் இயையாதன; மாறுபட்டன. ஆனால் ‘இதை விட இது சிறிது பெரிது’ என்னுமிடத்தில் உடன் இணைந்தமையைக் காண்க. (62)

சிலசொற்றொடர்கள் சொற்பொருளை யுணர்த்தால் குறிப்பால் வேறு பொருள் உணரவும் நிற்கும். செஞ்செவி என்றால் பொன்னும் மணியும் அணியும் செவி எனப்பட்டு அச்செவியினையுடையாரது செல்வச் செழிப்பைக் குறிப்பால் உணர்த்துவதைக் காணலாம். (63)

செய்யுளில் முன்னிலையொருமை முன்னிலைப் பன்மை வினை கொள்ளுதல் உண்டு. அது ஆற்றுப்படைச் செய்யுளில் ஆம். கூத்தராற்றுப்படையில், ‘தலைவ’ என விளித்தவிளி (மலை.50) (முன்னிலையைச் சுட்டிய சொல்) ‘பெறுகுவிர்’ என்ற பன்மையொடு (மலை. 157) முடிந்தது காணலாம்.

புறனடை

சொல்லதிகாரத்துள், உலகவழக்கினும் செய்யுள்வழக்கினும் பொருள் பெறச் சொல்லப்பட்ட சொற்களையெல்லாம் பலவேறு செய்கையுடைய பழைய இலக்கண நூல் நெறி யானே தவறு படாது வேறுபடுத்தி உணருமாற்றான் பிரித்துப் பொருத்திக் காட்டுக.

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்