பக்கம் எண் :

  

தொல்காப்பியம் - சொல்லதிகாரம்

(உரைவளம்)

எச்சவியல்

இளம்பூரணர்

இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எல்லா வோத்தினுள்ளும் எஞ்சிய பொருள்களை யுணர்த்தினமையின் எச்சவியல் என்னும் பெயர்த்து.

சேனாவரையர்

கிளவியாக்க முதலாக உரியிய லிறுதியாகக் கிடந்த ஒத்துக்களுள் உணர்த்துதற் கிடமின்மையான் உணர்த்தப் படாத எஞ்சிநின்ற சொல்லிலக்கணம் எல்லாம் தொகுத்து உணர்த்திய வெடுத்துக் கொண்டார் அதனான் இவ்வோத்து எச்சவியல் என்னும் பெயர்த்தாயிற்று.

‘கண்டீரென்றா’ (எச்-29) எனவும், ‘செய்யா யென்னும் முன்னிலை வினைச்சொல்’ (எச்-54) எனவும், ‘உரிச்சொல் மருங்கினும்’ (எச்-60) எனவும், ‘ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ (எச்-65) எனவும் இவை முதலாகிய சூத்திரங்களால் உணர்த்தப்பட்ட அசை நிலையும், வினைச்சொல் இலக்கணமும், வழுவமைதியும் அவ்வோத்துகளுள் உணர்த்தாது ஈண்டுணர்த்தியது என்னையோவெனின், அதற்குக் காரணம் அவ்வச் சூத்திரம் உரைக்கும் வழிச் சொல்லுதும்.

பல பொருட் டொகுதிக்கு ஒன்றனாற் பெயர் கொடுக்குங்கால் தலைமையும் பன்மையும் பற்றிக் கொடுப்பினல்லது தலைமையும் பன்மையும் எச்சத்திற் கின்மையானும் பத்துவகை

####261