xvii

 அரசாங்க அறிக்கைகளிலும்1 வர்த்தமானப் பத்திரிகைகளிலும் அடிக்கடி புகழ்ந்திருக்கின்றனர்.இவர் சென்னை ஷெரீப்பாயும் விளங்கினர்.

இவர் தமது உத்தியோக அலுவல்களைத் திறம்படச் செய்து புகழீட்டியதுடன் அமையாமல், நாட்டு மக்களின் நலம் கருதி அறிவுத் துறையிலும் பற்பல தொண்டுகள் ஆற்றி வந்தனர். இதனால், வர்த்தமானப் பத்திரிகைகள் இவரைப் 'பரோபகாரப் போலீஸ் உத்தியோகஸ்தர்' எனப் பாராட்டி யிருக்கின்றன.

இவர் தம் பெயரால் ‘பவானந்தர் கழகம்’ என்னும் கல்விக் கழகம் ஒன்றை நிறுவி, அதன் வளர்ச்சிக்காகவும் தொண்டுகளுக்காகவும் தாம் அரிதின் ஈட்டிய பெரும் பொருளை இறுதிமுறி2 வாயிலாக அர்ப்பணம் செய்திருக்கின்றனர். பல துறைகளில் ஆராய்ச்சி புரிவதும், பொதுஜன நன்மைக்கான ஞானத்தையும் கல்வியையும் நீதி நெறியிலும் உடற்கூற்றுத் துறையிலும் மக்களிடையிற் பரவச் செய்வதுமே அக்கழகத்தின் நோக்கமாகும். அக்கழகச் சார்பில் இவரால் நிறுவப்பட்ட நூல் நிலையம் ஒன்று திகழ்கின்றது. அந்நூல் நிலையத்தில் சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாக இவரால் அரிதின் முயன்று தொகுக்கப்பெற்ற பல்லாயிரம் நூல்கள் - ஏட்டு வடிவிலும் கையெழுத்திலும் அச்சிலும் அமைந்தவை - உள்ளன.

இவர் இலண்டன்மாநகர ராஜரிகத் தேச சரித்திர சங்கத்தில் ஓர் அங்கத்தினர்;3 ராஜரிக ஆசிய சங்கத்திலும் ஓர் அங்கத்தினர்.4 தமிழ் நூல்கள் பலவற்றை இவர் பலவகைக் குறிப்புகளுடனும் ஆராய்ச்சி முகவுரைகளுடனும் பதிப்பித்து வெளியிட்டுத் தமிழுலகத்திற்குச் சிறந்த தொண்டாற்றியிருக்கின்றார். தமிழ் மொழியிடத்தும் தமிழரிடத்தும் இவருக்கிருந்த அன்பின் பெருக்கினை அளவிட்டுக் கூறல் இயலாது. தமிழிலக்கணங்களில் தொன்மை வாய்ந்தனவும் சிறந்தனவுமாகிய  தொல்காப்பியம் பொருளதிகாரம் (நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையுடன்), யாப்பருங்கல விருத்தியுரை, இறையனாரகப் பொருளுரை, பேரகத்தியத் திரட்டு,


1 Administration Reports. 2 Will. 3 Fellow of the Royal Historical Society. 4 Member of the Royal Asiatic Society.