xxxiii
வேண்டுவதுரைத்தல் முதலிய இடங்களில் மட்டுமே உரையாசிரியர்கள் புதிய
மேற்கோள்களைக் காட்டிச் செல்வர். எஞ்சிய இடங்களில் ஒரு நூற்குக்கண்ட
உரைகளிலும், ஒருபொருள் பற்றிய நூல்களிலும் முன்னோர் மொழியையும்
பொருளையும் போற்றிக் கொள்வதே மரபு என்க.
1‘‘ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்துக் காட்டிய அக்கரச்சுதகமும்
மாத்திரைச் சுதகமும், பிந்துமதியும், பிரேளிகையும் முதலாக உடையனவும்
இப்பெற்றியே தமிழாகச் சொல்லு மிறைக் கவிகளும் அறிந்து கொள்க’’ என்று
யாப்பருங்கல விருத்தி கூறுகின்றது. இதில் உள்ள ஆரியம் என்னும் பாரிரும்
பௌவம் என்னும் தொடரை ஆண்டு 2‘‘ ஆரியம் என்னும் பாரிரும்
பௌவத்தைக் காரிகை ஆக்கித் தமிழ்ப் படுத்திய அருந்தவத்துப்
பெருந்தன்மை அமிதசாகரர்’’ என்று குறிக்கின்றது காரிகையுரை. ஆதலால்,
இரண்டன் உரையாசிரியரும் ஒருவராகவே இருக்கலாம் என்பார்3
உளரென்பர்.
தலைமகனும் தலைமகளும் தமியராய் எதிர்ப்படும் காட்சியைக்
‘‘கற்கந்தும் எறிபோத்தும் கடுங்கண்யானையும் தறுகட்பன்றியும் கருவரையும்
இருநிலனும் பெருவிசும்பும் அனையார்’’ எனத் தொடங்கி இறையனார்
களவியல் கூறுமாறே முழுமையும் கூறிச் செல்கிறது களவியற்காரிகை!
ஓரிருபக்க உரைநடை முழுமையிலும் வேற்றுமை இல்லை! அதற்காகக்
களவியல் உரைகாரரே, களவியற் காரிகைக்கும் உரைகாரர் என்பதா? அதற்கு
எத்துணைத் தடைகள் உள. ஆதலால், முன்னவர் மொழியைப்
பொன்னேபோற் போற்றிக் கொண்ட தன்மை இஃது என்க.
விருத்தியுரைகாரராலும், காரிகை உரைகாரராலும் மேற்கோள்
காட்டப்பெறும் இலக்கண ஆசிரியர்களுள் ஒருவர் மயேச்சுரர்.
1. யா.வி.பக்: 547
2. யா.கா. பாயிரம். உரை.
3. உரையாசிரியர்கள். திரு.மு.வை. அரவிந்தன் பக். 485.
|