xvi

யாப்பருங்கலக் காரிகை

 

வைத்தோவெனின் காரிகை வவையால் நாற்பத்து நான்கும். (பக். 3) என்று
உரையாசிரியர் காட்டியதற்கு முரண்பாடாக முடியும். ஒழிபியற் காரிகை முதனினைப்பும்
இப் பதிப்பில் சிறந்த சுவடிகளால் திருத்தம் பெற்றுள்ளது.

பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட சுவடிகளின் விவரம்:

காரிகைப் பதிப்பு விஷயமாகப் பயன்பட்ட சுவடிகள் மொத்தம் பதினான்கு.
இவையாவும் இந்நூல் நிலையத்து ஏடுகளே. இவற்றின் நிலைமையும் விவரமும் பின்
வருமாறு:-

* சுவடி எண். 27. மூலமும் உரையும் பூர்த்தி. இதனை மேலே டாகக் கொண்ட
கையெழுத்துப் பிரதி ஒன்றும் பயன்பட்டது.

எண். 67, மூலமும் உரையும் பூர்த்தி. காரிகைச் சிற்றுரை என்று
குறிக்கப்பட்டுள்ளது. இதில் உதாரணச் சூத்திரங்களும் உதாரண விலக்கியச்
செய்யுள்களும் இல்லை.

எண். 177. பூர்த்தி. காரிகை மேற்கோள் சூத்திரங்களும் உதாரண இலக்கியச்
செய்யுட்களும் மட்டும் உள்ளன. சுவடி, 67-ம், 177-ம் ஒருவர் வீட்டுப் பிரதிகளே.

எண். 150. பூர்த்தி. இது 177-ஆம் சுவடியைப் போன்றது.
 

எண். 251. மூலமும் உரையும். கா-8 முதல் இறுதிவரை உள்ளது. இது
கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரவர்கள் தம் கைப்பட எழுதி வைத்த பிரதி
போலும்.

எண். 351. மூலமும் உரையும், கா. 38-முதல் இறுதிவரை உள்ளது.

எண். 369. மூலமும் உரையும். கா. 1-முதல் 24-மட்டும் உள்ளது.

எண். 380. மூலமும் உரையும். முற்றும்.

எண். 541. மூலமும் உரையும். கா. 1-முதல் 31-முடிய உள்ளது.


* இவர் இயற்றிய கோடீச்சுரக்கோவை முதலியவற்றை எந்தையார் சிவக்கொழுந்து
தேசிகர் பிரபந்தங்கள் என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறார்கள்.