முகவுரை

xv

 
பிறகு இம்மேற்கோட் சூத்திரத்திற் கூறப்பட்டிருக்கும் செய்திக்கு விரிவுரை தரும்
நோக்குடன், ‘அந்நாற் சொல்லுந் தொகுக்குங் காலை யென்ற வழி நான்கு சொல்லாவன’
என்று தொடங்கி இயற்சொல், திரிசொல். திசைச்சொல். வடசொற்களின் இலக்கணம்
விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

பக்கம் 197-இல், ‘ஓரடியால் நடப்பனவும் சொன்னவாறு’ என்பதன் பின், ‘இனி
நூலாவது, என்று தொடங்கிப் பல பக்கங்களில் நன்னூற் பாயிரத்துட் காணப்படும்
செய்திகள் முறையே கொடுக்கப்பட்டுள்ளன. இங்ஙனம் பிறகாலத்து இடைச் செருகல்
களாகச் சேர்க்கப் பெற்றவை பல. * இவை எல்லாம் திருத்தமான பிரதிகளில் காணப்
பெறவில்லை. சிறந்த பிரதிகளில் காணப்பட்ட சில செய்திகள் அச்சுப் புத்தகங்களில்
இல்லை. இவற்றுள் அவசிய மில்லாதவற்றை நீக்கியும், அவசியமென்று தோன்றிவற்றைப்
பகரக் குறிகளுக்கிடையில் அங்கங்கே சேர்த்தும் இது பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
‘கொன்றார்ந் தமைந்த’ (பக். 99.) என்னும் ஆசிரியத் துறைக்கு நான்காம் அடியில்
பதினாறு சீர் அமைதல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியிலும், காரிகைப்
புத்தகங்களிலும் இவ்வடி அங்ஙனம் அமையவில்லை. சில பதிப்பாசிரியர்கள் இதனைக்
குறித்துக் குறிப்பும் வெளியிட்டுள்ளார்கள். கிடைத்த சுவடிகளின் பரிசோதனையினால்
இப்பதிப்பில் இப்பகுதி திருத்தம் பெற்றுள்ளது.

ஒழிபியலில் உள்ள காரிகைகளின் முதனினைப்புக்களைக் கூறும் ‘தூங்கேந்
தடுக்கல் பிரிதன் மயங்கிசை’ என்ற உரைச் சூத்திரக் காரிகை நூலாசிரியர் செய்ததாக
அச்சுப் புத்தகங்களில் காணப்படுகிறது. அக்காரிகையும் ஆசிரியர் செய்ததாகக்
கொண்டால் ஒழிபியற் காரிகைகளின் எண்ணிக்கை பத்தாகிவிடும். உறுப்பில் 20-ம்,
செய்யுளியல் 15-ம் இதனோடுகூட மொத்தக்காரிகைச் சூத்திரங்கள் 45-ஆகிவிடும்.
இக்கணக்கு ‘‘இந்நூல் எவ்வள


* குணசாகர ருரை இங்ஙனம் கூடியும் குறைந்தும் பிரதிதோறும்
வேறுபட்டிருத்தலினால் சில ஏடுகளின்மேல் ‘காரிகை விரித்துரை’, ‘காரிகைசிற்றுரை’,
‘இது காரிகை விருத்தி’ என்ற தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு
இந்நூலுக்கு உரைகள் பல உள்ளனவென்று கொள்ளுதல் பொருந்தாது.