xiv

யாப்பருங்கலக் காரிகை

 
தன. அந்த அஸ்திவாரபலம் இன்னும் இருந்து வருகிறது. இலக் கணமென்றால்
கடினமானதென்ற நினைவே இல்லாமல் சுலபமாக மனத்துக்கு உத்ஸாக முண்டாகும்
வண்ணம் ரெட்டியார் பாடம் சொன்ன முறையை நான் என்றும் பாராட்டக்
கடமைப்பட்டுள்ளேன். அவரிடம் நான்கு மாதங்கள் நான் பாடம் கேட்டேன். ஆயினும்
என் வாழ்வு முழுவதும் அந்தப் பாடம் பயன்பட்டு இன்பம் தருவதாயிற்று.’

ஐயரவர்கள் எண்ணியதை நிறைவேற்ற நான் கடமையுற்ற வனாதலால்
இப்பதிப்பை செங்கணம் ரெட்டியாரவர்களுக்கு அர்ப்பணம் செய்து அவர்கள்
ஞாபகார்த்தமாக வெளியிடுகிறேன். அவருடைய பௌத்திரர் ஸ்ரீ N. A. விருத்தாசல
ரெட்டியார் என்பவர் இப்போது செங்கணத்துக்கு அருகேயுள்ள வெண்பாவூர் என்னு
மிடத்தில் சுக ஜீவியாக இருந்து குடும்பத்தின் பெருமையைப் பாது காத்து வருகிறார்.
இப்போது இவர் இப்பதிப்பைப் பார்த்துச் சந்தோஷ மடைய விருப்பது எனக்கு
ஆறுதலாக இருக்கிறது.

இதுகாறும் வெவ்வேறு காலங்களில் யாப்பருங்கலக் காரிகை பல அறிஞர்களால்
அச்சிற் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அப்பதிப்புக்களுள் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் திரு.
அ. குமாரசாமிப் பிள்ளையவர்களின் பதிப்பு ஒன்றே புத்துரையாகும்; மற்றவை எல்லாம்
குணசாகரரின் பழைய வுரையோடு கூடியவை. அவை யெல்லாம் ஒரு படித்தாகவே
உள்ளன. உரையில் வேற்றுமை அதிகம் இல்லை.

இந் நூல் நிலையத்தில் உள்ள சுவடிகளை எல்லாம் ஒப்பு நோக்கி வந்த
காலத்தில் உரையின் பல பகுதிகள் குணசாகரர் காலத்துக்குப் பின் பிரதி செய்தோரால்
யாப்பருங்கல விருத்தியி னின்றும் எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளமை புலனாயிற்று.
‘யாப்பருங்கல விருத்தியிற் காண்க.’ என்று காரிகையின் உரையாசிரியர் கூறியுள்ள
இடங்களில் எல்லாம் யாப்பருங்கல உரையிலுள்ள தொடர்பான செய்திகள் சில
பிரதிகளில் அங்கங்கே இடைச் செருகலாகச் சேர்த்து எழுதப் பெற்றிருந்தன.
இப்பதிப்பில் 175-ஆம் பக்கம். ‘அவற்றுள் விகாரம்..........குறுக்கலும் என’ என்றதன் பின்
சில சுவடிகளில். ‘என்னை? அந்நாற் சொல்லுந் தொகுக்குங் காலை.............என்மனார்
புலவர் என்றார் தொல்காப்பியனார்’ என்று ஒரு மேற்கோள் சூத்திரம் காணப்படுகிறது.