பற்றிச் சிறிதும் அறியாத நிலையில் இருந்தேன் நான். எனக்கு அதைக்
கற்பிப்பது சிரமமான
காரியந்தான். ஆனாலும் ரெட்டியார் தெளிவாக எனக்குக்
கற்பித்தார். அவருடைய ஞானமும்
என்னுடைய ஆவலும் சேர்ந்து அந்தத் தெளிவுக்குக்
காரணமாயின.
|
* * *
|
‘யாப்பருங்கலக் காரிகையும், உரையும், மேற்கோட் செய்யுட் களும் என்
உள்ளத்தே
நன்கு பதிந்தன. மேற்கோட் செய்யுளின் அர்த்தத்தையும். எந்த
இலக்கணத்திற்கு
உதாரணமாகக் காட்டப் படுகிறதோ அந்த இலக்கணம் அதில்
அமைந்திருப்பதையும்
ரெட்டி யார் எடுத்துரைப்பார். அந்த இலக்கணத்தை அமைத்துப்
புதிய செய்யுள்
எழுதும்படி சொல்லுவார். நான் எழுதியதைப் பார்த்து இன்ன இன்ன
பிழைகள்
இருக்கின்றன என்று விளக்குவார். ஒருவகைச் செய்யுளுக்குரிய இலக்கணத்தை
அந்த
வகைச் செய்யுளாலேயே உரைக்கும் இலக்கணநூல்கள் தெலுங்கிலும்
வடமொழியிலும்
உள்ளனவாம். ரெட்டியாருக்குத் தெலுங்குதாய்மொழி. அதிலும்
அவருக்குப் பயிற்சி
உண்டு. தெலுங்கு நூலைப்பற்றி என்னிடம் சொல்லி, ‘‘அவ்வாறே
நீரும் செய்து
பழகும்’’ என்று உரைத்து அந்த வழியையும் கற்பித்தார். அப்படியே
நேரிசை வெண்பாவின்
இலக்கணத்தை நேரிசை வெண்பாவிலேயே அமைத்தேன்;
ஆசிரி யப்பாவின் இலக்கணத்தை
ஆசிரியப்பாவாலேயே கூறினேன்; மிகவும்
சிரமப்பட்டு இவ்வாறு பாடிக் காட்டுவேன்.
அந்தச் செய்யுட்களில் உள்ள குணத்தைக்
கண்டு முதலில் எனக்கு உத்ஸாகம் ஊட்டுவர்;
பிறகு பிழை யிருந்தால் அதையும்
எடுத்துக் காட்டுவார்.
|
‘காரிகையின் முதற் செய்யுளின் உரையில் உரையாசிரியராகிய குணசாகரர் வேறு
மொழிகளிலுள்ள நூல்களை உவமையாக எடுத்துச் சொல்லுகிறார். அந்த நூல்களைப்
பற்றிய வரலாறுகளை மாத்திரம் ரெட்டியார் சொல்லவில்லை. ஆதலின் அந்த
விஷயத்தில்
சந்தேகம் இருந்தது. இடையிடையே வரும் மேற்கோள்களில் ஜைன சமயத்
தொடர்புடைய
பாடல்கள் பல. அவற்றில் அந்தச் சமய சம்பந்தமான சில
செய்திகளையும் அவர்
விளக்கவில்லை. மற்ற எல்லாம் தெளிவாகவும் அழுத்தமாகவும்
என் அறிவில் பதிந்
|