யாப்பருங்கலக் காரிகையை எந்தையாரான மகா மகோ பாத்தியாய டாக்டர்
ஐயரவர்கள் தம் இளம்பிராயத்தில் செங்கணம் விருந்தாசல ரெட்டியாரவர்களிடம் கற்றுக்
கொண்டார்கள். அந்த அஸ்திவார பலத்தினாலேயே பிற்காலத்தில் தாம் இலக்கணப்
புலமையை எளிதில் பெற இயன்றதென்று அவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அந்த
நன்றி யறிவின்
பொருட்டு அவர்கள் யாப்பருங்கலக் காரிகையை மற்ற
நூல்களைப்போலக் குறிப்புரை முதலியவற்றுடன்
வெளியிட்டு அதனை இவர்களுக்கு
அர்ப்பணம் செய்ய எண்ணியிருந்தார்கள், பல காரணங்களால்
அவர்களுடைய
வாழ்நாளில் அது நிறைவேறாமற் போயிற்று. எனக்கு அது வருத்தமாக இருந்தது.
அவர்கள் தொகுத்து வைத்துள்ள குறிப்புகளைக் கொண்டும் காரிகைப் பிரதிகளைக்
கொண்டும்
அப்பணியை ஒருவாறு நிறைவேற்றும் பேறு இப்போது எனக்குக் கிடைத்தது.
|