இங்ஙனம் மற்றும் பல செய்திகள் காரிகையில் மயக்கத்துக்கு
இடமின்றித்
தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
எழுத்தும் சொல்லும் பயில்வார்க்கு நன்னூல் எப்படியோ, அப்படியே
யாப்பிலக்கணம் பயில்வாருக்குக் காரிகை பயன்பட்டு வருவது என்றாலும், நன்னூலுக்கு
வழங்கி
வருவது போன்ற பல உரைகள் காரிகைக்கு இல்லை. குணசாகரரின் உரை
ஒன்றே உளது. குணசாகரர்
காலத்துக்கு முன் இந்நூலுக்கு வேறு உரைகள்
இருந்தனவோ என்று கருதுமாறு குணசாகரர் ஓரிடத்தில்
‘வேறு பொருள் கூறுவாரு
முளர்’ (கா. 2. உரை) என்று குறிப்பிடுகிறார்.
|
நூலாசிரியரும் உரையாசிரியரும் காரிகையில் எடுத்தாளும் அரசர்,
ஆசிரியர்,
ஊர்கள், தெய்வங்கள், நூல்கள் முதலியன:-
அரசர் முதலிய தலைவர் : அச்சுதன், கண்டன், கதக்கண்ணன்,
கவி கண்ணனார்,
காளிங்கன், சுவர்ணமாப்பூதன், சேட் சென்னி, சோழர், திரையன்,
பாரி, மலையன்,
மாசேனன், வரகுணன்.
ஆசிரியர் : அகத்தியர், அவிநயர், இடைக்காடனார்,
காக்கை பாடினியார்,
கையனார், தொல்காப்பியர், நத்தத்தனார், பல்காயனார், பொய்கையார்,
மயேச்சுரர்.
|
ஊர்கள் முதலியன : கச்சி, குன்றூர், கூடல், கொற்கை, கோழி, கோளூர்,
சோழநாடு, தலையாலங்கானம், தொண்டி, தொண்டை நாடு, பழையனூர், பறநாடு,
பாலைநல்வாய்,
புகார், புத்தூர், முள்ளூர், வஞ்சி, வேங்கைவாயில்.
தெய்வம் முதலியன : அருகன், ஆதிநாதர், இந்திரன், கண்ணன்,
சிவபெருமான்,
துர்க்கை, திருமால், நரசிங்க மூர்த்தி, பலராமன், முருகன்.
நூல்கள் : அடிநூல், அரு மறை யட்டக வோத்தின் வருக்கக்
கோவை, அவிநயர்
யாப்பு, இசைத் தமிழ்ச் செய்யுட் டுறைக் கோவை, இராமாயணம்,
உரூபாவதாரம், ஊசி
முறி, ஐங்குறுநூறு, கர்நாடகச் சந்தம், கலித்தொகை, கீழ்க்கணக்கு,
குண
|
|