xx

யாப்பருங்கலக் காரிகை

 
   இவர் காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்றும் இவர் முதல்
இராசராசன் காலத்தவர் என்றும் ஸ்ரீ. மு. இராகவையங்காரவர்கள் கூறுவர்.
எங்ஙனமாயினும் இவர் முதற்குலோத்துங்கன் காலத்துக்குப் பிற்பட்டவர் அல்லர்.

‘குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத்................. அருந்தவத்தோனே’
(யா. வி. பாயிரம்) என்று அமிர்தசாகரர் வழங்கப் பெறுவதனால் இவருடைய ஆசிரியர்
குணசாகரர் என்பது போதரும். இக்குணசாகரர் வேறு; யாப்பருங்கலத்துக்கும்
காரிகைக்கும் உரை கண்ட குணசாகரர் வேறு. பின்னவர் தம் உரையுள் அமிர்தசாகரரை
‘அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர்’ என்று பாராட்டியுள்ளார்.

யாப்பருங்கலத்தை இயற்றியவரும் இந்த அமிர்தசாகரரே என்பது.

‘இந்நூலுடையாரும் ‘‘மாஞ்சீர் கலியுட் புகா’’ எனவும், ‘‘நாலசைச்சீர் வெண்பாவி
னண்ணா வயற்பாவின், நாலசைச் சீர் நேரீற்று நாலிரண்டாம் - நாலசைச்சீர், ஈறுநிரை
சேரி னிரு நான்கும் வஞ்சிக்கே, கூறினார் தொல்லோர் குறித்து’’ என்னும் புற
நடையானும் பிறவாற்றானும் விளங்கக் கூறினார் ஆகலான் என்க’

(யா. வி. சூ. 15, உரை)

என்றும்.

‘அது போல இந்நூலுடையாரும் வெண்பா இறுதிச் சீருக்கு வேறு உதாரண
வாய்பாட்டால் ஓசை யூட்டுதற் பொருட்டாக்கிக் குற்றியலுகர மீறாகிய காசு, பிறப்பு
என்னும் வாய் பாட்டானே நேரீற் றியற்சீக்கு வேறுதாரணம் எடுத்தோதினார் என்க’

 (யா. வி. சூ. 57, உரை)

என்றும் யாப்பருங்கல விருத்தியில் குணசாகரர் கூறுவதனால் விளங்கும். ‘மாஞ்சீர்
கலியுட் புகா’ என்பது 38-ஆம் காரிகைச் சூத்திரமாகும். காசு பிறப்பு வாய்பாடு கூறியது
25-ஆம் காரிகையாம்.

      மேலே காட்டிய முதல் எடுத்துக் காட்டிலிருந்து யாப்பருங் கல விருத்தியுள்
ஒவ்வோர் ஓத்தின் இறுதியிலும் உரையின் இடையிலும் காணப்படும் வெண்பாச்
சூத்திரங்களுள் பல, நூலின் பெயர் குறிக்கப்படாதவை. இவ்வாசிரியரே இயற்றியவை