இந் நூலாசிரியர் இயற்றிய உதாரண இலக்கிய முதனினைப்புக் காரிகைகள்
9, 11,
13, 15, 18, 20, 22-ஆகியவைகளே. பிற்பகுதியிற் காணப்படும் ஏனை உதாரண
முதனினைப்புக்
காரிகைகள் உரையாசிரியர் இயற்றியவை. இதனை நோக்கும்போது இந்
நூலாசிரியர் காரிகை
இலக்கணச் சூத்திரங்களை முதலில் முறையாக இயற்றி முடித்து,
அதன் பின்னர் ஆங்காங்குச் சேர்க்கவேண்டிய
உதாரண இலக்கிய முதனினைப்புக்
காரிகைகளை இயற்றிச் சேர்த்திருத்தல் வேண்டும் என்பது
போதரும். எஞ்சிய பகுதியை
எழுதுவதற்குள் இவர் காலகதி யடைந்தனரோ அன்றி யாதானும் ஓர்
இடர்ப்பாட்டால்
எழுதாது விடுத்தனரோ என்று தோன்றுகிறது.
|