இந்நூலின் சூத்திரங்கள் யாவும் வெண்பாவினால்
இயற்றப்
பட்டிருக்கின்றன. சூத்திரங்கள் வெண்பாவினாலும் இயற்றப்படலாம் எனப்
பேராசிரியர் கூறினர். அதனைத் தொல். பொருள். மரபியல், 'மேற்கிளந்
தெடுத்த' என்னும் 100 -ஆம் சூத்திரத்தின் விசேட உரையில் அவர்,
செய்யுள் என்றான், அடிவகைச் செய்யுளின் வேறுபட்ட பொருட்பாட்டிற்று
ஆகிய அடிவரைப்பாட்டினுட் சிறப்பு உடைய ஆசிரியத்தானும்
வெண்பாவானும் செய்யப்படும் சூத்திரம் என்றற்கு என்பது.
என்னை ? மண்டிலப்பாட்டின் உடம்பொடு புணர்த்துச் சூத்திரம்
செய்தமையானும், சின்மென் மொழியிற்று ஆய பனுவல் வெண்பாட்டாகி
வருதலானும் என்பது என்று கூறியதனால் அறிக. இந்நூலின்கண் எழுத்து
அதிகாரத்தின் முன்னே சிறப்புப்பாயிர வெண்பாக்கள் இரண்டு இருக்கின்றன.
அவற்றை அடுத்துத் தற்சிறப்புப் பாயிர வெண்பா ஒன்றும், அவையடக்கங்
கூறும் வெண்பா ஒன்றும் இருக்கின்றன. இவை பாயிரம் என்னும் பெயராற்
குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலின் எழுத்ததிகாரத்தின் வெண்பாக்கள்
இருபத்து நான்கு; சொல்லதிகாரத்தின் முன்னே தற்சிறப்புப்பாயிர வெண்பா
ஒன்று இருக்கின்றது. அது நீங்கலாகச் சொல்லதிகாரத்தின் வெண்பாக்கள்
எழுபது ஆகும். ஆகமொத்தம் இந்நூலின் வெண்பாக்கள்
தொண்ணூற்றொன்பது ஆகும்.
நன்னூல் தோன்றுதற்குமுன் தொல்காப்பியம்
கற்பவர் முதலில் இந்
நூலைக் கற்றுப் பின்னரே தொல்காப்பியம் கற்று வந்தனர் என்ப.
இந்நூலின் ஆசிரியர் களந்தைப்பதிக் குணவீர
பண்டிதர் என்பவர்
என்க. வச்சணந்திமாலை என்னும் வெண்பாப் பாட்டியலை இயற்றியவரும்
இவரே. இவ்விரு நூற்களையும் இயற்றியவர் இவரே என்பதனை,
|