அவற்றுள், ஆக்கியோன் பெயர் என்பது நூல் செய்த ஆசிரியன்
பெயர். இந்நூல் யாராற் செய்யப்பட்டதோ? எனின்,
|
|
கற்றவர் புகழும் களந்தையென் பெரும்பதி குற்றமில் வாய்மைக் குணவீர பண்டிதன்
|
என்னும் ஆசிரியனாற் செய்யப்பட்டது என வெண்பாப் பாட்டியலின் பாயிர
உரையினும் கூறியவற்றான் அறிக. இந்நூலாசிரியருடைய ஆசிரியர்
வச்சணந்தி முனிவர் என்பவர். அதனை, உளமலி பேரருள் உயிர்மிசை
வைத்த, வளமலி களந்தை வச்சணந்தி முனிவரன், கொள்கையின் வழாஅக்
குணவீர பண்டிதன் என்பதனால் அறிக.
|
இந்நூலின் ஆசிரியர் சமண மதத்தினர். அதனை இவர்
இந்நூலினது
எழுத்து அதிகாரத்தின் முதலினும், சொல் அதிகாரத்தின் முதலினும்,
வெண்பாப் பாட்டியலின் முதலினும் கூறிய கடவுள் வாழ்த்துக்களாலும்
இந்நூலுக்கு இவர் வைத்த பெயரானும் அறிதலாகும்.
|
இந்நூல் என்ன பெயர்த்தோ? எனின், இந்நூல்
எய்திய சிறப்பின்
எழுத்தையும் சொல்லையும் மெய்தெரிவகையின் விளங்க நாடித் தேனிமிர்
பைம்பொழில் தென் மயிலாபுரி நீல்நிறக் கடவுள் நேமி நாதர்தம்
திருப்பெயராற் செய்தமையின் நேமிநாதம் என்னும் பெயர்த்து என
இந்நூலின் உரைப்பாயிரத்திற் கூறியதனை ஈண்டு நோக்குக.
|
நேமிநாதர் என்பவர் ஜைந மதத்தினர்கள் இனிது
போற்றி
வணங்கும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களுள், இருபத்து இரண்டாம்
தீர்த்தங்கரர் எனவும், இவர் கண்ணனுக்குத் தாயாதி முறையின் வந்த
தம்பியார் எனவும், ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் பலராமர், வாசுதேவர்,
பிரதி வாசுதேவர் என்பவர்கள் இருக்கின்றார்கள் எனவும், மயிலையில்
முன்னே ஜைனக் கோயில்கள் ஐந்து இருந்தன எனவும், அவற்றுள்
நேமிநாதர் கோயிலும் ஒன்று எனவும், மயிலையில் இருந்த ஜைனக்
கோயில்களின் சம்பந்தமான பாடல்கள் பல இருக்கின்றன எனவும்,
அவற்றுட் பல அச்சிடப்பட்டிருக்கின்றன; சில | |