அச்சிடப்படாமல் இருக்கின்றன எனவும், நேமிநாதர்
வரலாறுகள் ஸ்ரீ
புராணம், ஜைந ஹரிவம்சம் என்னும் நூற்களில் கூறப்பட்டுள்ளன எனவும்,
ஜீவபந்து T. S. ஸ்ரீபால் அவர்கள் கூறி, அச்சிடாமல் இருக்கும் பாடல்களுள்
நேமி நாதரைப்பற்றிய பதிகம் ஒன்றை என்னிடம் தந்தனர். நான்
அப்பதிகத்தின் முதற் செய்யுளை எழுதிக்கொண்டு அப்பதிகத்தை அவரிடம்
தந்துவிட்டேன். அச்செய்யுள்:
|
|
பெருகலர் மாமழை பெய்தொரு சுரர்முகில் பெயர்வது
போலிமையோர் அருமலர் தூவிய அலைகடல் மேல்வரு அரிகுல நாயகனூர் கருமலி
ஆலய மொடுமணி மாளிகை கடியிதழ் தாதெனவத் திருமலி தாமரை கருமலி பொன்மலி
திருமயி லாபுரியே. |
என்பது.
|
அன்றியும் மேற்படி ஸ்ரீபால் அவர்கள்
நேமிநாதர் கண்ணனுக்குத்
தாயாதி முறையின் வந்த தம்பியார் என்பதை நேமிநாதரைப்பற்றித்
திருநூற்றந்தாதி என்னும் நூலை இயற்றிய அவிரோதி ஆழ்வார் என்பவரால்
இயற்றப்பட்ட ‘திருவெம்பாவை' என்னும் நூலின் பதினாறாஞ்செய்யுளானும்
அறிதலாம் என்று கூறி அந்நூலை என்னிடம் தந்தனர். அச்செய்யுள்:
|
|
பிறவிப் பெருங்கடலை நீந்திய பெய்வளையாய்
உறவுத் தமர்வா
ழுச்சந்த வாழ்மலைமேல்
அறமிக
வுஞ்செய்யும் அம்மை அடியிணைகள்
நறைமிக்க
பூவணையால் நல்கிப் பொழிந்தேத்திக்
கறவைத்
திரள்காத்த கார்வண்ண னுக்கிளையான்
நிறமிக்க
நேமிசிநன் நீள்பதங்கள் தான்பாடித்
திறமுற்ற
மாமுனிவன் சீரருளா லெங்கும்
நிறையப்
பொழியு மழையேலோ ரெம்பாவாய்
|
என்பது ஆகும்.
|
அத்திருவெம்பாவையில் இருபது செய்யுட்கள் இருக்கின்றன.
|
தேனிமிர் பைம் பொழில் தென்மயிலாபுரி, நீல்நிறக்கடவுள்
நேமிநாதர்தம் திருப்பெயராற் செய்தமையால்,
|