தண்டியலங்காரம் முதலிய அணியிலக்கணங்கள்
எழுந்தன என்று கூறுவதிலும், தொல்காப்பியத்தையும்
வடமொழி அணியிலக்கணங்களையும் கொண்டு தண்டியலங்காரம்
எழுந்தது என்றல் பொருந்துவதாகும். அன்றியும், அணியிலக்கணம்
என்பதே பொருத்தமற்றதென்பதும், தொல்காப்பியரும்
உவமையைப் பொருளை விளக்கும் கருவியாகவே கொண்டனர்
என்பதும் பேராசிரியர் முதலானோருடைய கொள்கையாகும்.
|
4. தண்டியலங்காரம் :
|
தமிழ்
மொழியிலுள்ள ஐந்திலக்கணங்களையும் கற்க
விரும்புவோர் எழுத்துச் சொல் இலக்கணங்களுக்கு
நன்னூலையும், அகப்பொருள் இலக்கணத்திற்கு
நம்பியகப் பொருளையும், புறப்பொருள்
இலக்கணத்திற்குப்
புறப்பொருள் வெண்பா
மாலையையும், யாப்பிலக்கணத்திற்கு
யாப்பருங்கலக் காரிகையையும் சிறப்பாகக்
கற்பதுபோல, அணியிலக்கணத்திற்கு
இத்தண்டியலங்காரத்தையே சிறப்பாகக்
கற்கின்றனர். 100 அணிகள், 64
அணிகள் என விரிவாக
நுவலும் இலக்கண நூல்கள் இருக்க, 35 அணிகள் பற்றியே நுவலும் இத்
தண்டியலங்காரத்தைப் பலரும்
பயில்வதொன்றே இதன் சிறப்பினை நன்கு
விளக்கும். தொல்காப்பிய
உரையாசிரியர்,
அடியார்க்குநல்லார், வீரசோழிய நூலார், இலக்கண
விளக்க நூலார் முதலிய பேராசிரியர்கள்
பலராலும்
எடுத்தாளப்பட்ட பெருமையும் இதற்குண்டு.
|
(அ) முதனூல்:
|
இந்நூல்
தொகுத்தல் முதலிய நால்வகையுள் மொழி பெயர்ப்பு
வகையைச் சார்ந்தது. இதன் முதனூல் காவியாதர்சம்
என்பதாகும். இதன் ஆசிரியர் தண்டி
என்பவராவர். இவர் இராசசிம்ம பல்லவன் (கி.பி.
666 - 705) காலத்தவர். இந்நூலை முதனூலாகக் கொண்டு
எழுந்த நூல்கள் தமிழில் மட்டுமன்றிப்
பிறமொழியிலும் உள்ளன. அவையாவன : தமிழ் -
தண்டியலங்காரம், கன்னடம் - கவிராச
மார்க்கம், சிங்களம் - சியபஸ்லகாரம்.
|
(ஆ) இந்தூலின்
அமைப்பும் அழகும் :
|
மேற்கூறிய
காவியதர்சத்தின் இலக்கணத்தை அப்படியே தழுவி,
அந்நூலில் நான்கு பிரிவுகளாகக்
கூறப்பட்டிருப்பதை மூன்று பிரிவில் அடக்கி
இந்நூல் அழகாகச் செய்யப்பட்டுள்ளது. இந்நூல்
பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல்
என்ற மூன்று பிரிவுகளையுடையது. பொதுவணியில்
செய்யுட்களின் வகைகள்,அவற்றின் இலக்கணங்கள்,
வைதருப்பர், கௌடர் ஆகியோர்க்குரிய
சொல்லமைப்பு நெறிகள் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
பொருளணியியலில் 35 அணிகளின் இலக்கணமும்
விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சொல்லணியியலில்
மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம்,
சித்திர கவிகளின் இலக்கணம், வழுக்கள்,
அவற்றின் அமைதிகள், மலைவுகள் அகியன
கூறப்பட்டுள்ளன. | |