நீண் மரமா, நீர்நிலையோர் புள்ளி
பெறநெருப்பாம்’’, ‘‘வாம மணிமேகலையார்’’ (பக். 125)
என்னும் வெண்பாக்களும்
உயிர்மெய் எகர ஒகரங்கள் புள்ளிபெற்று வழங்கியதை,
‘‘நெய்கொண்டெ னெட் கொண்டெ
னெற்கொண்டென் கொட்கொண்டென்,
செய்கொண்டென், செம்பொன்கொண்டென்’’
(யா. வி. ஒழிபியலுரையிற் கண்ட மேற்கோள்)
என்னும் பிந்துமதி உதாரணச் செய்யுளும் விளக்கும்.
சில அன்பர்கள் விரும்பியபடி இந்நூற் சூத்திரங்கள் விளங்குதற்பொருட்டுச்
சந்திபிரித்தே
பதிப்பிக்கப்பெற்றன.
சில மேற்கோள்களை வசனமென்றாவது செய்யுளென்றாவது இவ்வுரையில்
நிச்சயிக்கக்கூடவில்லை;
இக்காலத்து வழங்காத சில மொழிகளுக்கும் சில
வாக்கியங்களுக்கும் பொருள் புலப்படவில்லை,
‘‘உவர்க்கடலன்ன......கொள்வோயே’’ (பக். 124) என்னும் பகுதி ஒரே பாடலாக
வேறிடத்திற்
காணப்பெற்றும் இதில் இடையிடையே பிரித்துப் பிரித்துக் குறிப்புரை
எழுதப்பட்டிருந்தமையின்,(
அவ்வாறே பதிப்பிக்க நேர்ந்தது; இது போல்வன சில.
இப்புத்தகத்தின் இறுதியிலுள்ள அரும்பத முதலியவற்றின் அகராதியில் இந்நூல்
மூலம்,
உரை, மேற்கோள் என்பவற்றிற் கண்ட அரிய மொழிகளும் விஷயங்களும் சிறிய
வாக்கியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. விரிவஞ்சி எல்லாச் சொற்களுக்கும்
பொருளெழுதவில்லை; இந்தப் புத்தகத்தைக்கொண்டு வேறு நூல்களையும் அவற்றைக்
கொண்டு
இதனையும் ஆராய்ந்து உண்மை காணுதற்குக் கருவியாகவே இவ்வகராதி
எழுதப்பெற்றது.
இதனை ஆராய்ச்சி செய்யுங்காலத்தும் பதிப்பிக்குங்காலத்தும் உடனிருந்து
ஒப்புநோக்குதல்
முதலிய உதவிசெய்துவந்த அன்பர்களுள், மயிலாப்பூர் பி. எஸ்.
ஹைஸ்கூல் தமிழ்ப்
பண்டிதர் பிரஹ்மஸ்ரீ இ. வை. அநந்தராமையரவர்களும், சென்னை
அரசாங்கத்துக் கையெழுத்துப்
புத்தகசாலைத் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி ம. வே.
துரைசாமி ஐயரும் தத்தமக்குக்
கிடைத்த ஓய்வு நேரங்களிலெல்லாம் சிறிதும் சலிப்பின்றி
அன்புடன் செய்த
பேருதவிகள் ஒருபொழுதும் மறக்கற்பாலனவல்ல.
* தண்டியலங்காரம், மாத்திரைச்சுருக்க மேற்கோள்; கூந்தல் ஓதி, மரம் ஓதி;
நீர்நிலை ஏரி, நெருப்பு எரி.
( இப்பதிப்பில் ஒரே பாடலாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. |