செய்த சத்தநூல் பற்றிக் கூறுவர்’’ (கலித்துறை,
12, 49) என்று வந்துள்ள வாக்கியங்களும்
இங்கே கருதற்பாலன.
இவர் துறவறத்தினர்; ‘‘பவணந்தி யென்னு நாமத் திருந்தவத் தோனே’’ (சிறப்பு.
அடி,
22) என்பதும் நந்தி முனிவரென இவர் வழங்கப்படுதலும் இதனைப் புலப்படுத்துகின்றன;
சைனருள் துறவிகள் நந்தியென்று வழங்கப்படுதலை அச்சணந்தி, வச்சணந்தியென்னும்
பெயர்
வழக்குக்களாலும், ‘‘கனக நந்தியும் புட்பக நந்தியும் பவண நந்தியுங் குமணமா
சுனக நந்தியுந் திவண நந்தியும்’’ என்னும் தேவாரத்தாலும் அறியலாகும்.
திருவல்லத்திற்கு வடக்கேயுள்ள வள்ளிமலையின் குகையொன்றில் அமைத்திருக்கும்
பழைய சைனபிம்பங்களுள் ஒன்றன்கீழே வரையப்பெற்றிருக்கும் அடியிற்காட்டிய
சாஸனத்திற்கண்ட
பவணந்தி பட்டாரரென்பவர் இந்நூலாசிரியராக இருத்தல் கூடுமென்று
சிலர் கருதுகின்றனர்;
சில காரணங்களால் இஃது அங்கீகரிக்கத்தக்கதாயினும் —
சாஸனத்தின் காலம்
விளங்காமையால் இதனை உறுதியாக எண்ணக்கூடவில்லை.
‘‘ஸ்வஸ்திஸ்ரீ பாணராயர் குருகளப்ப பவணந்தி பட்டாரர சிஷ்யரப்ப தேவஸேன
பட்டாரர
பிரதிமா’’ [Epigraphica Indica, Vol. IV. Page, 142.]
இவருடைய ஆசிரியர் சனகை யென்னுமூரிலிருந்த சன்மதி முனிவரென்பார்; இதனை,
‘‘பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள், பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி’’ (சிறப்பு.
அடி,
20-21) என்பதனாலும்,
|