சிலாசாஸன பரிசோதனைத் தலைவர்
ம-ள-ள-ஸ்ரீ டி.ஏ. கோபிநாதராயரவர்கள், எம்.ஏ., அன்புடன் தெரிவித்தார்கள்.
இந்நூலாசிரியருடைய ஊரும் மேற்கூறிய சனகையென்றே மேலே காட்டிய தொண்டைமண்டலசதகச்
செய்யுளைக்கொண்டு சிலர் நிச்சயிக்கின்றனர். தொண்டை நாட்டிற்
‘‘சனகாபுரமென்று இக்காலத்து வழங்கப்படுகின்ற ஊர் இச்சனகையாக இருக்கலாமென்பது
சிலர் கொள்கை; இந்நூலைச் செய்வித்த சீயகங்கன் மனைவியாகிய அரியபிள்ளை யென்பவள்,
திருவல்லத்தில் திருவல்லமுடைய நாயனாருக்கும் அம்பிகைக்கும் சந்தி விளக்கு ஒவ்வொன்று
வைத்ததைத் தெரிவிக்கும் ( சாஸனமும் திருவேகம்பமுடையார்க்கு அவன் திருநுந்தாவிளக்கு
வைத்ததைத் தெரிவிக்கும் காஞ்சீபுரசாஸனமும் இதற்கு அனுகூலமாக இருக்கின்றன.
கொங்குமண்டலத்திலுள்ள இருபத்துநான்கு நாடுகளுள் ஒன்றாகிய ( குறும்புநாட்டில், இக்காலத்திற்
சீனாபுரம் என்று வழங்கப்படுவதும் முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடைய கோயில்
உள்ளதுமான சனகாபுரம் இந்நூலாசிரியருடைய ஊரென்று பின்னுள்ள செய்யுளைக்கொண்டு நிச்சயிப்பாருமுளர்:-
|