இவ்வூர் சீயகங்கனுடைய கங்க நாட்டிற்கு
அயலதும் அவனாட்சிக்கு
உட்பட்டிருந்ததுமான கொங்குநாட்டில் இருத்தலாலும் சினாலயத்தைப் பெற்றிருத்தலாலும்
இதுவும் அங்கீகரிக்கற்பாலதே.
அமராபரணனென்ற சிறப்புப்பெயர் வாய்ந்த சீயகங்கனென்னும் அரசன்
தமிழிலக்கியங்களின்
ஆராய்ச்சிக்கு இன்றியமையாததும், பரந்து கிடப்பதுமான
தொல்காப்பியத்தைக் கற்று
விதி விலக்குக்களை அறிந்துகொள்வது சில்வாழ்நாட் பல்பிணிச்
சிற்றறிவினராகிய
மனிதர்க்கு அரிதென்பதையறிந்து அந்நூலிற் கூறப்படும் எழுத்து முதலிய
ஐந்திலக்கணங்களையும்
யாவரும் வருத்தமின்றி அறிந்து கொள்ளும்படி ஒவ்வொரு
பகுதியையுஞ் சுருக்கித் தொகைவகை
விரியால் விளக்கி ஓர் இலக்கண நூலைச்
செய்தருளுகவென்று வேண்டிக்கொண்டமையாலும்,
இயல்பாகவேயுள்ள இரக்க மிகுதியாலும்
இவர் இந்நூலையியற்றி வெளிப்படுத்தினர்;
‘‘அரும் பொருளைந்தையும்...............வகுத்தனன்’’
(சிறப்பு. அடி 10-19) என்பதனாலும்,
|
என்னும் கொங்குமண்டலசதகச் செய்யுளாலும் இது விளங்கும்.
‘‘முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்’’ (சிறப்பு. 18-19)
என்பதனால்,
இவர் தொல்காப்பியத்தில் மட்டுமன்றி அக்காலத்து வழங்கிய அகத்திய
சூத்திரங்களிலும்
அவிநயம் முதலிய பழைய இலக்கண நூல்களிலும் சைனேந்திரம் முதலிய
வடமொழி வியாகரணங்களிலும்
இருவகை வழக்குக்களிலும் முன்பு வழங்கிப் பின்பு
வீழ்ந்தொழிந்தவற்றை நீக்கி
வழங்குவனவற்றைத் தழுவி மரபுவழுவின்றி
இந்நூலையியற்றினமை வெளியாகின்றது.
அகத்தியசூத்திரங்களைப் பின்பற்றினமை, இந்நூலிலுள்ள 130, 258, 259, 272,
290,
294, 299, 322, 326, 332, 339, 341, 354, 377, 381, 394-ஆம் சூத்திரவுரைகளாலும்,
தொல்காப்பியத்தைப் பின்பற்றினமை தானெடுத்துமொழிதலாக இவரெடுத்துக்கொண்ட
‘‘குறியதன் முன்னர்’’ என்பது முதலிய ஏழு சூத்திரங்களாலும், 105, 130, 319,
357, 371,
377, 388, 448-ஆம் சூத்திர உரைகளாலும், பிற அமைதிகளாலும், அவிநயத்தைப்
பின்பற்றினமை, 59, 73, 101. *124, |