நூல்

xvii

   

இந்நூற் சூத்திரங்களெல்லாம் பவணந்திமுனிவராலே செய்யப்பெற்றவையல்ல; தானெடுத்து மொழிதலாக இவராற் பழைய நூல்களிலிருந்து எடுத்தாளப் பெற்றவையுமுண்டு.

இதன் பாயிரப்பகுதிகளுட் சிலசில இறையனாரகப் பொருட் பாயிரத்திலும் தொல்காப்பியப்பாயிரவுரைகள் முதலிய உரைகளிலும் வேறுபட்டும் வேறுபடாமலும் சூத்திரங்களாகவும் உரைநடையாகவும் காணப்படுகின்றன; அப்பகுதிகளுள், மூன்று சூத்திரங்கள் (6, 15, 16) தொல்காப்பியம்; ஐந்து (9-13) * பாடலனார் செய்தவை; இரண்டு (51-2) பனம்பாரம். ‘‘பூமலியசோகின்’, என்பது முதலியனவே பவணந்தி முனிவராற் செய்யப்பெற்றனவென்றும் அவற்றுள், ஏழுசூத்திரங்கள் (89, 251, 316, 395, 403, 407, 438) தொல்காப்பியமென்றும், திருக்குறள் நுண்பொருண் மாலையுடையார் கொள்கையின்படி ‘‘ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ’’ (சூ. 397) என்பது இந்நூலாசிரியர் வாக்கன்றென்றும் இப்போது தெரியவருகின்றன. தொல்காப்பிய உரையாசிரியர்களைப் போலவே மயிலைநாதரும், சிறப்புப்பாயிரத்துக்கும் அதன் உரைக்கும் இடையே பாயிரச் சூத்திரங்களை அமைத்திருத்தல் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.

இந்நூற் சிறப்புப்பாயிரமும், ‘‘அடையெண்பெயர்’’, ‘‘எழு பானிரண்டெழுத்தின்’’, ‘‘இருதிணைமூவிடம்’’, ‘‘பேரறுபத்திரண்டு’’ என்னும் பாடல்களும் இன்னாரின்னாரால் இயற்றப்பெற்றவையென்று தெரியவில்லை.

பிரயோகவிவேகத்தில், 2, 5, 6, 7, 8, 12, 16, 18, 19, 21, 24, 26, 33 - 7, 39, 42, 49-ஆம் கலித்துறைகளினுரைகளில் அந்நூலுரை யாசிரியரும், இலக்கணக்கொத்தில், 6, 7, 8, 12, 43, 85, 86, 117, 129, 131-ஆம் சூத்திரங்களினுரைகளில் அந்நூலுரையாசிரியரும், (தொல்காப்பியப்பாயிரவிருத்தியில் ‘திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன யாவையெனின்’ என்பது முதலியவற்றிலும், இலக்கண விளக்கச்சூறாவளியில் எழுத்தியல், 6, 23, 27, 31, பதவியல் 1, உயிரீற்றுப்புணரியல், 2, 7, 9, 19, 35, பெயரியல், 37-ஆம் சூத்திரவுரைகளிலும் திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீசிவஞானயோகிகளும் எழுதியிருக்கும் இனிய அரிய வாக்கியங்கள் இந்நூலின் அருமை பெருமைகளையும் ஆசிரியருடைய கல்விவன்மையையும் இவர்பால் அவர்களுக்குள்ள நன்மதிப்பையும் விளங்கத் தெரிவிக்கும்.


* இப்பெயர் மாடலனாரென்றும் வழங்கும்.      ( பழையபதிப்பு, பக். 6; புதியபதிப்பு, பக். 7.