தொல்காப்பியத்திற் குற்றியலுகரப்புணரியலிலுள்ள
விதிகளை இந்நூலில் 180-ஆம்
சூத்திரம் முதலியவற்றிலும், அந்நூலில் வேற்றுமையியல்
முதலிய
மூன்றுறுப்புக்களிலடங்கியவற்றை இந் நூலில் 290-ஆம் சூத்திரம் முதலியவற்றிலும் அடக்கியிருப்பது முதலியனவும் அந்நூலிற் சுருங்கிக்கிடந்த கால இடைநிலை
முதலியவற்றை
இதில் விரித்துக் கூறியிருப்பது முதலியனவும் அந்நூலில் இல்லாத
வடமொழி விதிகளைப்பெயர்த்து
இதில் பதவியலில் அமைத்திருத்தலும் தொகுத்தல்
விரித்தல் மொழிபெயர்ப்பு என்னும்
நூல்யாப்புக்கள் இந்நூலில் அமைந்திருத்தலை
முறையே காட்டுகின்றன. தொகை விரியென்னும்
நூல்யாப்பு சூத்திரக்கிடக்கை முறையால்
இந்நூலுள் ஆங்காங்கு உணரலாகும்.
இந்நூற் பொருளையும் இதன் பெயரையும் அமைத்து நலமுறப்பாராட்டிய
தமிழ்நூல்களுமுண்டு;
அவற்றுட் சில வருமாறு:-
|